முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
புத்தளம் மன்னார் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தென் கிழக்கு,கிழக்கு பல்பலைக்கழக , மாணவ மாணவிகள் , அட்டாளைச்சேனை கல்விக்கல்லூறு கட்டுறு பயிலுனர்கள் , அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ஆசிரியர்கள் ,கல்முனை பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் புத்தளத்தைச் சேர்ந்த மாணவர்கள் போன்றோர்.
நீண்டகாலமாக போக்கவரத்து சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு புத்தள டிப்போவும் அக்கரைப்பற்று டிப்போவும் தலா ஒவ்வொரு பேருந்தகளைப் புத்தளத்திற்கு போட்டிருந்தது.
இச்சேவை மக்களுக்கு மிகுந்த பிரயோசனமாக இருந்து வந்தது.ஆனால் அண்மைக்காலமாக இந்த பஸ்கள் மீது அனுராதபுர காட்டுப்பகுதியில் வைத்து இனம் தெரியாத விஷமிகள் தாக்குதல் நடாத்தி வருகின்றனர்; , பஸ் கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளன.
இதற்கு யார் காரணம் , இது தொடர்பாக உரிய அதிகாரிகட்கு அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் இச்சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மைத்திரியுகத்தில் வன்முறைக்கு இடமில்லை. இவ்விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களும் ,போக்குவரத்து அமைச்சரும் தலையிட்டு சுமூக நிலைமையை ஏற்படுத்துமாறு வேண்டுகிறோம்.குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
