பொத்துவில் கல்வி சம்பல் அதனைச் சாப்பிட சில கும்பல்....?

எம்.ஏ. தாஜகான் 

பொத்துவில் உபவலயத்தில் எந்தவித பதிலீடுகளும் இன்றி 32 ஆசிரியர்கள் கடந்த வாரம் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். இதனால் பொத்துவில் பாடசாலைகள் ஆசிரியர் பற்றாக்குறையினால் பெரும் சிரமத்துக்குள் இயங்கி வருகின்றது. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பாதிப்படைந்துள்ளது. 

அக்கரைப்பற்று வலயத்தில் ஏலவே 72 ஆசிரியர்கள் பற்றாக்குறையோடு இயங்கி வந்த பொத்துவில் உபவலயத்தில் தற்பொழுது 32 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ளமையினால் 100 மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்விச் சமூகம் சுட்டிக்காட்டுகின்றது. 

பொத்துவில் உப வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பொழுது மேலும் பல ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கு நியமித்திருப்பது எந்த வகையில் பொருத்தமாகும்?

கடந்த வாரம் இடமாற்றம் பெற்றுச் சென்ற 32 ஆசிரியர்களும் உயர்தர வகுப்புக்கள், புலமைப்பரிசில் வகுப்புக்கள், சாதாரண தரங்களில் ஆங்கிலம்,கணிதம்,விஞ்ஞானம்,தமிழ் பாடங்களை போதித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தககது. இவர்களின் இடமாற்றத்தினால் மாணவர் கல்வி நிலை மந்த கதியில் செல்கின்றது.

முதலாம் தவணைப்பரீட்சைக்காக மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும் என பெற்றோர்கள் வினயமாக வேண்டுகின்றனர். 

கடந்த காலங்களில் அமைச்சர் அதாவுல்லாஹ் பொத்துவிலுக்கான ஆசிரியர் ஆளணி நிரப்புவதில் அதிக பங்கு வகித்தார். 

அதன் விளைவால்தான் பொத்துவிலுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் முன்வைத்தார்கள். ஏன்? அக்கரைப்பற்று மாகாண சபை உறுப்பினர் தவம் கூட பொத்துவிலுக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும் என்றும் சொன்னார். இப்பொழுது இந்த இடமாற்றம் மற்றும் பதிலீட்டு ஆசிரியர் நியமிப்பதில் தவம் கரிசனை செலுத்துவாரா? பொத்துவில் மக்களின் வாக்கு வங்கிகளினால் மாகாண சபை உறுப்பினராகி வலம் வந்து கொண்டிருக்கும் அம்பாரை மாவட்டத்தின் மாகாண சபை உறுப்பினர்கனள் மீண்டும் பொத்துவில் கல்விக்கு முள் வேலிகளாக நிற்பார்களா? 

தற்பொழுது ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சி, முஸ்லிம்காங்கிரஸ் முதலமைச்சர், முஸ்லிம் காங்கிரஸ் தனித்தாட்சி நிலவும் இந்நிலையில் பொத்துவிலி;ல் 100 வீதம் முஸ்லிம் காங்கிரசுக்கும், ஜனாதிபதி மைத்திரிக்கும் வாக்களித்த பொத்துவில் அப்பாவி மக்களின் பிள்ளைகளின் கல்வி புறக்கணிக்கப்படுவதா? இவ்விடயத்தில் பொத்துவில் அரசியல் வாதிகள் , கல்வியதிகாரிகள் என்ன நிலவரத்தில் காய்நகர்த்தல் செய்வார்கள் பொருத்திருந்து பார்ப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -