நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட பைல்கள்களை காணவில்லை- நிதியமைச்சர் ரவி

நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட ஆவணக் கோவைகள் (பைல்கள் ) காணாமல் போயுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

நிதியமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணக் கோவைகள் (பைல்கள்) காணாமல் போயுள்ளன.  அண்மையிலும் சில பைல்கள் காணாமல் போயுள்ளன. 

இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி ஆவணக் கோவைகளை கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.  திருடர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -