தெமட்டகொட 'அல் மதரஸத்துன் நூர்' மத்ரசாவின் 3வது வருட பரிசளிப்பு விழா!

நஜ்முல் ஹுசைன்

நஜ்முல் ஹுசைன்-

தெமட்டகொட B/31 ஞானவிமல வீதி, தொடர்மாடியில் இயங்கிவரும் 'அல் மதரஸத்துன் நூர்'மத்ரசாவின் 3வது வருட பரிசளிப்பு விழா அண்மையில் தெமட்டகொட, கெட்டவலமுல்ல மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

மத்ரசாவின் அதிபரான மௌலவியா பாத்திமா நுஸ்ரா ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முஸ்லிம் காங்கிரஸ் பெண்கள் கிளைத் தலைவியான திருமதி இப்தி, மேல் மாகாண சபை உறுப்பினரான முஜிபுர் ரஹ்மானின் செயலாளர் எம்.சீ. முஹம்மத் அலி, இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தைச் சேர்ந்த பாத்திமா லூலூ ஜிப்ரி, நவாஸியா பாருக், மற்றும் தேசமான்ய ஷலீனா மாஹிர்,உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின் போது தேசமான்ய ஷலீனா மாஹி;ர் மாணவன் ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதையும் மத்ரஸா மாணவர்களையும் படங்களில் காணலாம்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -