முன்னாள் ஆட்சியில் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட 50 பேர்களை உடனடியாக இலங்கைக்கு வருமாறு அழைப்பு!

அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்கள், மற்றும் முன்னாள் அமைச்சர்களின் புதல்வர்கள் உறவினர்கள், பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்ட அரசியல்வாதிகளின் மற்றும் ஓய்வுபெற்ற படைத்தளபதிகளையும் வெளிநாடுகளில் இராஜதந்திரவாதிகளாகவும் தூதுவர்களாகவும், கவுன்சிலர்கள், அதிகாரிகளாகவும் முன்னைய அரசினால் நியமிகக்ப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வரை சேவையில் உள்ளனர்.

மேற்படி அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட 50 பேர்களை உடனடியாக இலங்கைக்கு மீளதிரும்புமாறு வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இன்று ஊடகங்களிலும் 50 பேர்களது பெயர்கள் அவர்கள் வகித்த பதவிகள் என்பன வெளியாக்கப்பட்டுள்ளன.

இவர்களது வெற்றிடத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் நிருவாக சேவை அதிகாரிகள் 70 வீதமும் 30 வீதமும் அரசியல் ரீதியாக நியமிக்கப்படும். இத்திட்டத்தினை முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிகாமரின் கொள்கை அமுல்படுத்த்ரலப்படும் என வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிருந்தார்.

  1. அதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த நாவல பேர்ணாட்குரே,
  2. (இத்தாலித் தூதுவர்) எம்.என் பியசிரி,(மியன்மார் தூதுவர்) முன்னாள் அமைச்சர் மனோ விஜயவர்தனவின் மனைவி தாரா,
  3. (துருக்கி நாட்டின் தூதுவர்) முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்தினவின் மகன் புத்திக்க அதாவுட
  4. (டென்மார்க் தூதுவர்) முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்னவின் பேரன்,
  5. முன்னாள் அமைச்சர் கேகலிய ரம்புக்கவின் மகள், ஜீ.கே. ரம்புக்கவல 
  6. (இரண்டாவது செயலாளர் நியோக்) முன்னாள் அமைச்சர் டலகஸ் அழகப்பெருமவின் சகோதரர்
  7. ஜீட் அழகப்பெரும (சுவீடன் தூதுவர்)
  8. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியைச் சேர்ந்த டொக்டர் உதுமாலெப்பை,
  9. (ஜித்தா கவுன்சிலர்) முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வர் ஹூசைன் முஹம்மத்,
  10. (சவுதி அரேபியாவின் தூதுவர்) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினர் உதயங்க வீரதுங்க
  11. (ரசியாவுக்கான தூதுவர்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கோங்கே
  12. (தூதுவர் தென் ஆபிரிக்கா) முன்னாள் விமானப் படைத்தளபதி ஏயார் மார்சல் ஜயலத் வீரக்கொடி
  13. (பாக்கிஸ்தான் தூதுவர்), அட்மிரல் திசர சமரசிங்க
  14. (அவுஸ்திரேலியா) காமினி ராஜபக்ச
  15. (ஜேர்தான்), ராஜ எதிரிசுரிய
  16. (பிரேசில்), கலாநிதி கே.பி.எஸ். ஆமரசிங்க
  17. (வியட்நாம்), எஸ்.என். மரிக்கார் பாவா
  18. (ஆப்கணிஸ்தான்) வீ.நாகநாதன்
  19. (உகன்டா)எப்.ஜீ.என்.எம் டயஸ்
  20. (மாலைதீவு), கலாநிதி காமினி சமரநாயக்க
  21. (பிலிப்பைன்ஸ்) காலித்த பாலித்த கோங்காகே
  22. (நியோக்), கலாநிதி என்.எம்.ஏ. கருநாரத்தின 
  23. (யுனஸ்கோ) டப்ளியு. ரீ. விஜேரத்தின்
  24. (கொரியா), சரத் விஜேசிங்க
  25.  (இஸ்ரேல்), முன்னாள் இரானுவத் தளபதி சாந்த கொட்டே கொட 
  26. (தாய்லாந்து) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருனாகொட 
  27. (யப்பான்) தேசிய பாதுகாப்பு முன்னாள் ஊடகப் பேச்சாளர் லக்ஸ்மன் குழுகொல்ல
  28. (கன்பரா கவுன்சிலர்), அட்மிரல் வசந்த கருனாகொட
  29. (யப்பாண்), ரான பியதிஸ்ச
  30. (அவுஸ்திரேலியா) ஓ.எஸ்.த சில்வா
  31. (கங்கேரியா), கவுன்சிலர் மொகன் த அல்விஸ்
  32. (டொரன்டோ), அரசியல் ரீதியாக தூதுவலர் ஆலயங்களில் செயலாளர்கள் அதிகாரிகளாக நியமனம் பெற்றோர்கள் டொக்டர் கசினி கோகிலா
  33. (லண்டன் மிணிஸ்டர்), டி.ஜே.என்.ரம்புன்வெல
  34. (கன்பரா மினிஸ்டர் கவுன்சிலர்) பி.ஆர்.டபிள்யு.டபிள்யு, 
  35. குரே (பரிஸ் 2வது செயலாளர்) ம.நவோதி சேனாநாயக்க
  36. (வியட்னாம் 2செயலாளர்), டன்சன் ஜே.பேரேரா
  37. (கத்மன்டு மினிஸ்டர் கவுன்சிலர்) ரானி புலேவல
  38. (ரோம் மிணிஸ்டர்) ரத்னா ரணவீர (2வது செயலாளர்)
  39. வருன ஆபேசிங்க (வொசிங்டன் மினிஸ்டர்)
  40.  எம்.ஜ.குடேவத்த (பீக்கிங் மிணிஸ்டர்), 
  41. கே.டி.சி. கலேந்தி (கன்பரா 2வது செயலாளர்), 
  42. தர்சி லொக்குகே (வூஸ் 1வது செயலாளர்)
  43. தில்ருக்கான ஜயசிங்க (துபாய் 2வது செயலாளர்), 
  44. யசரா அபேநாயக்க (சிட்னி கவுன்சிலர்), 
  45. லக்ஸ்மன் குலுகெல்ல (கன்பரா பிரதி கவுன்சிலர்) 
  46. பிரதீப் முத்துமபண்டாரா (ஜேர்தான் 2வது செயலாளர்), 
  47. பி.கே.எம்.ஆர் எஸ் விஜேரத்தின (கெயிரோ 2வது செயலாளர்),
  48. உமயங்க நாணநயக்கார (நியோக் 2வது செயலாளர்) 
  49. ஜனனநி நாணயக்கார (வோசிங்டன் 2வது செயலாளர்) 
  50. எம்.எஸ் லியாவூடீன் (வன்டவேட் பிளேஸ் செயலாளர்)அனுசா சிவராஜா (வென்சுலா மிணிஸ்டர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -