எம்.ஏ. தாஜகான்-
கிழக்கு மாகாண சுகாதாரத்திணைக்களத்தினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற சிறந்த செயற்பாடுள்ள மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப்பரிசோதகர் தெரிவில், 2014ற்கான சிறந்த செயற்பாட்டு மேற்பார்வைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகராக கல்முனைப் பிராந்தியத்தின் பொத்துவில் சுகாதார வைத்திய காரியாலயத்தில் கடமை புரியும் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கான தெரிவுச் சான்றிதழ் அன்மையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் வழங்கி வைத்தார்.
%2Bcopy.jpg)
