12 வருடங்களாக அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.சீ.எம்.காதர் அதிபருக்கு பாராட்டு




எம்.எம்.ஜபீர்-

த்தியமுகாம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் 12 வருடங்களாக அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.சீ.எம்.காதர் நேற்று வியாழக்கிழமை (12) பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் வை.வீ.சுல்த்தான் (மௌலவி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.நஜீம், சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.எம்.உமர்மௌலான, எம்.எச்.எம்.ஜாபீர், நாவிதன்வெளி கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல். மஹ்மூத்லெவ்வை,  நளீர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எம்.ஏ.நளீம், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரியாவிடை மற்றும் பாராட்டு விழாவில் 12 வருடங்களாக இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைத்து ஓய்வு பெற்ற அதிபரின் சேவையை பாராட்டி பொண்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -