நிந்தவூரில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
சுலைமான் றாபி-
நிந்தவூர் அல் ஹிக்மத் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) அதன் தலைவர் கே.எம். சாபிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.கலந்தர், பிரதேச சபையின் செயலாளர் எம்.ஜௌபர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பி. மௌலானா, சனசமூக நிலையத்தின் போசகரும், ஊடகவியலாளருமான எம்.சஹாப்தீன் மற்றும் நிந்தவூர் சோண்டேர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆகியோர்கள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
நிகழ்வின் இறுதியில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரிற்கு விஷேட ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பைசல் காசீம் எம்.பி யினால் உணவுப் பொருட்கள் கையளிப்பு!
கிழக்கு கராயோர பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் மக்களுக்கு. 02-01-2015 இன்று. பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. பைசால் காசீம். அவர்களின் ஏற்பாட்டில். அரிசி,சீனீ,பருப்பு,மீன்டின். போன்ற உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை சமூக சேவைகள் அமைப்பான ISWAA பிரிவினர் ஒழுங்கு செய்திருந்தனர்,
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)