காலையில் சாப்பிட்டால் பகலைக்கும், பகல் நேரத்துக்கு சாப்பிட்டால் இரவைக்கும், இரவைக்கு சாப்பிட்டால் காலைக்கும் பட்டனியோடு வாடுகின்ற எமது கொழும்பு வாழ் அன்புள்ளங்கள் எப்போது எட்டாம் திகதி வரும் என்று காத்திருக்கின்றனர் மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கி இந்த மஹிந்த ராஜபக்ஸ்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்காக என மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி மருதானையில் மைத்திரிபாலவின் வெற்றியை உறுதி செய்யுமுகமாக இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் மருதானை ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான கித்சிறி ராஜபக்ஸ்ஸவின் தலைமையில் மிகவும் கோலாகலமாக மேடை அமைக்கப்பட்டு இடம்பெற்ற இப் பொதுக்கூட்டத்தில் பாரளமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, றோசி சேனாநாயக்க, ரவி கருணாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர்களுடன் மேல் மாகன சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், கொழும்பு பிரதேச அமைப்பாளர்கள் என ஐக்கிய தேசியக்கட்ச்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மைத்திரியின் வெற்றிக்காக உரையாற்றினார்கள்.
மேலும் இங்கு உரையாற்றிய பைரூஸ் ஹாஜி.,.. நான் இதே இடத்தில் சென்ற ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்காக உரையாற்றியும் அதே தேர்தல் காலப்பகுதியில் பல இடங்களுக்குச் சென்று பொன்சேகாவுக்காக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவன் என்றடிப்படையிலும் பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது எனும் அபிப்பிராம் மக்கள் மத்தியில் நன்றிக்கடன் செல்லுத்தும் நோக்கம் காணப்பட்டதனால் ஜானதிபதிக்கு மக்களின் செல்வாக்கு ஓரளவு காணப்பட்டதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆனால் இம்முறை தலை கீழாக மாறிவிட்டது. மக்கள் அன்றாடம் உணவுக்கு படும் கவலை இங்கே இருக்கும் தாய்மார்களின் முகத்தில் காணக்கூடியாக இருக்கின்றது. அதுதான் நான் பொன்சேகாவின் தேர்தலையும் இந்த தேர்தலையும் ஒப்பிட்டுகாட்டி ஏன் மைத்திரிக்காக இம்முறை நாடே மைத்திரி அலையாக மாறியுள்ளது என சுட்டிக்காட்டுகின்றேன் என கூறினார்.

இலங்கை முழுவதும் அதிவேக கடுகதி வீதிகள் நிமானிப்பதற்காகவே 2022ம் ஆண்டு வரைக்கும் மஹிந்த ராஜபக்ஸ்சவுக்கு ஜானதிபதியாக அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் இதேர்தலுக்கு இரண்டு வருடங்கள் காலவகாசம் இருந்தும் இப்போது நடாத்துகின்றார். இந்த கூட்டத்துக்கு சமூகமளித்திருக்கின்ற அல்லது கொழும்பில் வாழ்கின்ற எத்தனை பேர் அதிவேக வீதியை பாவித்து இருக்கின்றீகள்? எனும் கேள்வியை எழுப்பியதோடு வீதிகள் அமைக்கப்படும் போது அதன் செலவீனங்களை கணக்கிடுவது மிகவும் கஸ்டமான விடயமாகும்.
அதே நேரத்தில் ஏனைய அபிவிருத்திகள் அல்லது கட்டட நிருமானங்கள் என்பவற்றை ஐந்து அல்லது பத்து வருடங்களுக்குப் பிறகும் அதன் பெருமதியினையும் , செலவீனங்களையும் கணக்கிடுவது மிகவும் எளிதான விடயாமாகும். இதனை நன்கறிந்த மஹிந்த ராஜபக்ஸ்ஸவும் அவருடன் இருப்பவர்களும் இலங்கையில் அதிவேக வீதிகள் என்றும் கொங்கீறீட் யுகம் எனும் அபிவிருத்தி கண்கட்டி வித்தைகளை மக்களுக்கு காண்பித்து நாட்டு மக்களை கடன் சுமையாளிகளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என உரையாற்றினார்.

பைரூஸ் ஹாஜியின் உரையின் காணொளியினை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

.jpg)
.jpg)
.jpg)