கொழும்பு இளைஞர்கள் சிந்திக்கும் காலம் வந்து விட்டது- பைரூஸ் ஹாஜி

ஓட்டமாவடி அஹம்ட் இர்ஸாட்-

மோலவத்தை கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்படும் போது எமது சென்றல் வீதி, புதுக்கடை, மாலிகாவத்தை முஸ்லிம் இளைஞ்ஞர்கள் அல்லாஹ்வின் மாளிகை உடைக்கப்படுகின்றது என்ற உணர்ச்சிமிக்கவர்களாக நாரைய தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் கிராண்பாஸ் வீதிகளில் படுத்துக் கொண்டார்கள், அதே முஸ்லிம் வாலிபர்கள் சிலர் இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்படுவதற்கு யார் காராணமாக இருந்தார்களோ அவர்களின் போஸ்டர்களையும், கட்டவுட்களையும் சுமந்தவர்களாக இன்று அவர்களை மீண்டும் அதிகாரத்தில் வைப்பதற்காக காரியாலையங்கள் திறந்தும், வீதிவீதியாக அழைந்தும் திரிகின்றனர்.

இது இலங்கை வாழ்  ஓட்டு மொத்த சமூகத்துக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். கொழும்பு முஸ்லிம் இளைஞ்ஞர்கள் சிந்தித்து செயலாற்றுவதற்கு இந்த காலகட்டம்தான் முக்கிய காலகடமாக இருக்கின்றது இவ்வாறான கருத்தினை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மத்திய கொழும்பில் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நேற்று வெள்ளிக் கிழமை(19.12.2014) மாலை 8மணிக்கு மத்திய கொழும்பு சென்றல் வீதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் மேல்மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்ச்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி தெரிவித்தார். 

மேலும் உரையாற்றிய பைரூஸ் ஹாஜி...,

பள்ளிவாயல்கள்,முஸ்லிம்களின் உடமைகள் எல்லாம் அழிக்கப்பட்ட போது முஸ்லிம்கள் அல்லாஹ்விடத்திலே பொறுப்புக் கொடுத்தவர்களாக சமாதானமாக வாழவே முயற்சித்துக் கொண்டிருந்தனர். 

அதன்பலனே இப்போது அல்லாஹ்வின் கோபப்பார்வை இந்த அரசாங்கத்தின் மீது விழுந்ததன். அ பிரதிபளிப்புத்தான் இப்பொது இந்த அரசாங்கம் மைத்திரிபாலவின் பொது வருகையினை தொடர்ந்து ஆட்டம்கண்டு கொண்டிருக்கின்றது. அன்று நாங்கள் தஹஜத்துக்களிலும், சுபஹ் தொழுகைகளிலும் கேட்டதுவாக்கள்தான் இப்போது கபுலாகிக் கொண்டிருக்கின்றது. அது எமது வாலிப பிள்ளைகளுக்கு விளங்காமல் இருப்பதானது பெரும் கவலை தரக்கூடிய காணப்படுகின்றது.

அன்று நாங்கள் கேட்ட துவாக்கள் அங்கீகரிக்கப்பட்டதனால்தான் ஜாதிகஹெல உறுமய கூட இந்த அரசாங்கத்தை விட்டு விலகி எமது பொதுக்கூட்டனியுடன் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளனர். 

ஆனால் எமது இளைஞ்ஞர்களில் சிலர் அராங்கத்தை மீண்டும் அதிகாரத்தில் வைப்பதற்கு வீதிவீதியாய் அழைகின்றனர்.அக்குறனையில் 88 பள்ளிவாயல்கள் இருப்பதாகவும் அங்கு முஸ்லிம் தீவிரவாதம் இடம்பெறுவதாகவும் கூறிய பொதுபலசேனா மட்டுமே இன்று அரசாங்கத்துடன் இருக்கின்றது. 

இவற்றையெல்லாம் இங்கு வாழ்கின்ற மக்களும் இளைஞ்ஞர்களும் சிந்தித்து எமது வளர்ந்து வருகின்ற பிள்ளைகளின் எதிர்காலத்தையும், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு வரும் எட்டாம் திகதி எமது உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறி தேர்தலில் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒட்டு மொத்த வாக்குகளையிம் அளித்து அவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கிய பெருமைக்குறியவர்களாக நாங்கள் மாற்றமடைய வேண்டும் எனக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -