காரைதீவின் வரலாறு சொல்லும் நிகழ்வு : முச்சந்தியில் விபுலனின் திருவுருவச்சிலை!

 லோகஜராஜு-

முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை இலங்கையின் எங்கும் இல்லாதவாறு மிக பிரமாண்டமான தத்துருவமான உருவச்சிலையை காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் முச்சந்தியில் வைப்பதற்கு 12 அடி உயரமுள்ள காரைதீவின் முகவரியாக திகழ்கின்ற விபுலனின் உருவச்சிலை சம்பிரதாய முறைப்படி அவர் பிறந்த மண்ணுக்கு சற்று முன் கொண்டு வரப்பட்டு விபுலாநந்த சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கல்லாறில் இருந்து கனரக வாகன உதவியுடன் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு வந்தடைந்து பூசை நிகழ்வுகளின் பின்னர் பொது மக்கள் பார்வையில் முச்சந்தியில் காரைதீவு-அம்பாறை முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எங்கும் இல்லாதவாறு மிக பிரமாண்டமான தத்துருவமான உருவச்சிலையை காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் வைப்பதற்கு காரைதீவு இந்து சமய விருத்தி சங்கம், புஸ்பா சமூக பொருளாதார அமைப்பு, அறங்காவலர் ஒன்றியம் ஆகியன இணைந்து அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் பூரண வழிகாட்டலிலும் ஒத்துழைப்புடனும் துரிதமாக மிக்குறுகிய காலப்பகுதியில் விபுலனுக்கு சிலை வைக்கப்ட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வரலாற்று நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு தமது பங்களிப்புக்களையும் உதவிகளையும் புரிந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -