எஸ்.என்.எச்.டீன்-
மன்.முசலி தேசிய பாடசாலைக்கு அதிபர் தரம் 01 யைச் சேர்நத ஏ.எஸ்.எம்.லாஹிர் என்பவரை நியமிக்குமாறு முசலிப்பிரதேச சமூக நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பட்டதாரியான இவர் ஆசிரியராக , ஆசிரிய ஆலோசகராக , அதிபராக பல பாடசலைகளில் சேவை புரிந்துள்ளார். திறந்த பல்கலைக்கழக வளவாளராகவும் , ஆசிரியர் தொலைக்கல்வி விரிவுரையளராகவும் பணிபுரிந்துள்ளார்.கல்விப்புலம் தொடர்பாக மிகுந்த அறிவும் , அனுபவமும் நிறைந்த இவர் மிகவும் பொருத்தமானவர்.
சிலாவத்துறையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது புத்தளத்தில் வசித்து வருகின்றார்.இவரை முசலிப்பாடசாலைக்கு அதிபராக நியமிப்பதன் மூலம் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் தமது பணியை இலகுவாகவும் , சிறப்பாகவும் கொண்டு செல்லச் சிறப்பாபாக இருக்கும்.
முசலிப் புத்திஜீவிகள் ஒன்றியம் , பழைய மணவர் ஒன்றியம் , முசலிக் கல்விப் பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் , பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கம் போன்றன கோரிக்கை விடுகின்றன.இவ்விடயத்தில் அரசியல் தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவை வலியுறுத்துகின்றன.

0 comments :
Post a Comment