2015 ஜனவரியில் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டின் சரீஆ(மௌலவி ஆலிம்), ஃ அல்குர்ஆன் மனனம் ஆகிய இருபகுதிகளின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 14-12-2014 ஞாயிற்றுக் கிழமை மு.ப. 09.00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
விண்ணப்பதாரிகளில் அழைப்புக் கடிதம் கிடைத்தவர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் சமுகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் பின்வரும் தகைமைகள் காணப்படின் இந்நேர்முகப் பரீட்சையில் தகுந்த அத்தாட்சிகளுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
சரீஆப் பிரிவு :
15 வயதுக்குட்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள்.
அல்குர்ஆன் மனனப் பிரிவு :
11-13 வயதுக்கிடைப்பட்ட குறைந்தது தற்பொழுது பாடசாலையில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும்அல்குர்ஆனைச் சரளமாக ஓதத்தெரிந்தவர்கள்.
இந்நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்பவர்கள் தமது பிறப்பத்தாட்சிப்பத்திரம், பாடசாலை முன்னேற்ற அறிக்கை கல்விச் சான்றிதழ்கள் என்பவற்றுடன் சமுகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு : இங்கு ஷரீஆப்பிரிவு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் க. பொ. த. சாஃத, உஃத பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர்.
அதிபர்,
இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி,
த. பெ. இல: 105,
இல.: 50, ஹிரிம்புரகுறுக்குவீதி,
காலி
தொ. பே. இல. :
0912243672ஃ 077 7921418

0 comments :
Post a Comment