முக்கியஸ்தர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் ஒரே பார்வையில்...


ஏ.எஸ்.எம்.ஜாவித் -


தியாகத் திருநாளில் இயன்றளவு
தியாகங்களைப் புரிவோம்;
-அமைச்சர் பைஸர் முஸ்தபா

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இஸ்லாத்தின் இறுதிக் கடமையின் பூர்த்தி விழாவாக அமைந்துள்ள ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நாம், அதன் தத்துவங்களையும் மகிமைகளையும் அறிந்து, எமது வாழ்க்கையில் அதன் படிப்பினைகளை உணர்ந்து நடப்போமாக!

கால வெள்ளத்தால் அழியாத தியாக வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தி, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஒரு புண்ணிய நன் நாளாகத் திகழும் இப்பெருநாள் தினத்தில், சமூகத்தைச் சீர்படுத்த எவ்விதமான தியாகங்களையும் மேற்கொள்வதற்கு எம்மை மாற்றிக் கொள்வோமாக!

நபி இப்றாஹீம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோர்களது தியாகங்களை நினைவு கூர்ந்து, இவர்களின் வாழ்வின் அம்சங்கள் பற்றி அல்லாஹ் அருளியுள்ளவற்றை சீர்தூக்கிப் பார்த்து, அல்லாஹ்வுக்காக நாம் எதனையும் எப்பொழுதும் தியாகம் செய்யத்தயாராக இருப்பதற்கு முயற்சிப்போமாக! 'எனது உடைமை-நான்' என்ற பெருமைக் குணம் போன்ற தன்னலத் தன்மையை நம்மிடமிருந்து களைந்து, எதையும் நாம் பிறருக்கு தாராளமாகக் கொடுத்துதவ முன் வருவோமாக!.

நாம் இன்று நல்லாட்சியொன்றின் கீழ் சுதந்திரமாகவும்இ சந்தோஷமாகவும்இ நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த நிம்மதியும் சந்தோஷமும் நம் வாழ்நாளில் தொடர்ந்தும் நிலைத்து நீடிக்க வேண்டுமெனஇ இப் பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போமாக!.

இன்று அல்லாஹ்வின் அருளால் குதூகலமாக பெருநாளைக் கொண்டாடுவதைப் போன்றுஇ எல்லா வருடங்களிலும் பெருநாளைக் கொண்டாடுவதற்கு அல்லாஹ் துணைபுரிய வேண்டும் என இந் நன்நாளில் பிரார்த்திப்போமாக!.

இதே வேளைஇ இப் பெருநாளை ஈமானிய உணர்வுகளோடு வரவேற்றுஇ இஸ்லாத்துடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கைக்கான திட்டத்தைத் தீட்ட இந் நன்நாளில் முனைவோமாக!.

ஒவ்வொரு ஆண்டும் மலரும் இப் பெருநாளின் போதும் இதனை நாம் நினைவு படுத்திஇ நமது வாழ்நாளில் உருவாகியிருக்கும் அத்தனை தீய செயல்களையும் விட்டும் ஒதுங்கிஇ புதியதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்வோமாக!. பிறந்துள்ள இப்பெருநாளில்இ நம் மத்தியில் காணப்படும் சகல பிளவுகளையும்இ மனக் கசப்புகளையும்இ அடியோடு ஒழித்துஇ சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்பிஇ அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தின் இலட்சினையை உயர்த்திஇ இந்நன்நாளில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அப்துல்சலாம் யாசீம்-
தியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர்உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது பெருநாள் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும்வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். 
ஆண்டான், அடிமை என்ற பேதமின்றியும், கறுப்பன் வெள்ளையன் என்ற நிற வேறுபாடின்றியும், நாடு குல பேதங்களை மறந்து இஸ்லாமியர்களாகிய அனைவரும் புனித மக்கமா நகரில் ஹஜ்ஜுக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இன்றையத் தியாகத் திருநாள் சமூகங்களுக்கிடையே பல்வேறு படிப்பினைகளை உருவாக்கி உள்ளது. 
இறையோனின் கட்டளைக்கு அடி பணிந்து நபி இப்றாகிம் (அலை) அவர்கள் அன்பு மைந்தன் இஸ்மாயிலை அறுத்துக் குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறும், அதன் பின்னரான பல்வேறு சம்பவங்களும் இந்த புனித ஹஜ்ஜுக் கடமையில் உணர்த்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கும் ஏனைய சமூகங்களுடன் பரஸ்பர நல்லுறவுடன் வாழ்வதற்கும் திடசங்கற்பம் பூணவேண்டும். 
வடக்கு, கிழக்கில் யுத்தக் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த நாம் இன்று அதிலிருந்து விடுபட்டு சாந்தி சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு நாம் எந்த விதமான பேதமுமின்றி வாழப்பழகிக்கொள்வதன் மூலமே சமூகங்களுக்கிடையே தொடர்ந்து நல்லுறவு நீடிக்கும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@எம்.ஜே.எம்.சஜீத்-

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமானகௌரவ அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தி

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் மாத்திரமன்றிஇ உலகம் முழுவதும் பரந்து வாழும் நமது முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வூடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காய் எனது இதயம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியூம்இ மட்டில்லா மனநிறைவூம் அடைகின்றேன். (அல்ஹம்துலில்லாஹ்).

இஸ்லாத்தில் ஐந்தாவதும் இறுதியானதுமான கடமை ஹஜ் கடமையாகும். அல்லாஹ்வின் ஆணையை மதித்து அதற்காகக் கட்டுப்பட்ட ஒரு குடும்பத்தின் மூன்று தியாக சீலர்களான நபி இப்றாஹிம் (அலை)இ அன்னாரின் துணைவியார் அன்னை ஹாஜரா நாயகிஇ அன்னார்களின் தவப் புதல்வர் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் பெரும் தியாகம் உலகத்தவர்களுக்கு படிப்பினையை தந்ததோடுஇ இவ்வூலகம் முடிவூறும் வரையிலும் எம்மால் அதை நினைவூ கூறப்படவேண்டியதொன்றாகும். அன்னார்களின் இறைத் தியாகத்திற்காக வழங்கப்பட்ட அதியூயர்ந்த சன்மானமே ஹஜ்ஜூப் பெருநாளாகும். அச்சிறப்புமிக்க நாளில் முஸ்லிம்களின் வாழ்வில் தியாக உணர்வூ மென்மேலும் பெருக பிரார்த்திக்கிறேன்.

இன்று நமது நாட்டில் இனத்தீர்வூ தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றிஇ முஸ்லிம் மக்களுக்கும் தகுந்த நியாயமான உரிமைகளைப் பெறுவதற்கும்இ மேலும் அந்த உரிமைகளை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்மானங்கள் எட்டப்பட்டு நம் நாட்டில் வாழும் மூவின மக்களும் அச்சமின்றி சந்தேகமுமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இன்நன்நாளில் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக!

மேலும்இ ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு புனித மக்கமா நகரம் சென்றுள்ள ஹஜ்ஜாஜிகளின் ஹஜ் கடமை அல்லாஹூத்தஆலாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் புரிந்த நியாயமான பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போம்.


ஏ.எல்.எம். அதாஉல்லா
தலைவர் - தேசிய காங்கிரஸ்
முன்னாள் அமைச்சர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எம்.ஜே.எம்.சஜீத்-


 கிழக்கு மாகாண எதிர் கட்சி தலைவரின் ஹஜ்ஜுப் பெருநாள் தின வாழ்த்து

உலக முஸ்லிம்களின் உவகையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் எனது வாழ்த்துகளையும் தெரிவிப்பதில்  மகிழ்ச்சி அடைகினடறேன்.
பெற்று வளர்த்து பிரியமுடன் நேசித்த பிள்ளை  மீதான பாசத்தை விட படைத்துப் பரிபாலித்து பக்குவமாய் வழிகாட்டிய  வல்ல இறைவனைப் பயந்து பாலகனைப் பலியிடுமாறு கிடைத்த இறைகட்டளையை இதய சுத்தியுடன் நிறை வேற்றத் துணிந்த நபி இப்றாஹிம் (அலை) அவர்களதும்  இளம் பராயத்திலேயே இறையச்சம் நிறைந்த இதயத்துடன் தந்தையின் பணியைத் தவறாது  நிறைவேற்றத் தயவுடன் பணிந்த தனயன் இஸ்மாயீல் (அலை) அவர்களதும் தியாகங்களை நினைவு படுத்துவதாகவே ஹஜ்ஜுப் பெருநாள் நிலைத்திருக்கிறது.

அவா, அழுக்காறு, பெருமை, பேராசை  போன்றவற்றால் மனங்கள் மாசுறும் போது கோபம், குரோதம் என்பன ஊற்றெடுக்க மனிதர்களுக்கிடையில் பிணக்குகளும், பிரச்சினைகளும் பெருகி பிரிவினை உருவாக  சாந்தி, சமாதானம் என்பன சீர்குலைந்து விடுகின்றன. அதனால் மனித சமூகம்  அமைதியிழந்து  அதைத்தேடி பரிதவித்து அலைகிறது.

இறையச்சமும் தியாக உணர்வுமே  இத்துர்க்குணங்களை அகற்றி மனிதனைப் 
புனிதனாகத் தூய்மைப் படுத்துகிறது. இதனால் பொறுமை, அன்பு, மன்னிப்பு, மனிதநேயம் என்பன மனங்களில்  மலரவும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகவும் வழி செய்கிறது.
ஆகவே தியாகத் திருநாளாகிய இவ் ஹஜ்ஜுப் பெருநாளில்  முஸ்லிம்கள் தமது சகல துயரங்களிலுமிருந்து விடுபட்டு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மேலும் பொதுவாக  உலகத்திலும் குறிப்பாக இலங்கை திருநாட்டிலும் வாழும் சகல இன மக்களும் தங்களுக்கிடையிலான கசப்புணர்வுகள், பேதங்கள் மறந்து விட்டுக்கொடுப்புடனும்  அன்புடனும் அளவளாவி அமைதியும் சமாதானமும் தழைத்தோங்கி ஒற்றுமையாக வாழ  நாம் ஒவ்வொருவரும்  இத்தியாக திருநாளில் திடசங்கற்பம் பூனுவோமாக

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நமக்கும் தியகாத் திருநாள் உண்டோ ! – வேதாந்தியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஏ.எல்.ஆஸாத். – சட்டக்கல்லூரி-
ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வேதாந்தி தனது வாழ்த்து அறிக்கையில் பெருநாள் வாழ்த்துக் கவிதையொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
அகதிகளான நமது சமுகமும்
அடிமைகளான நமது தலைமயும்
இனத்தை தொலைத்த இளைஞர் கூட்டமும்
திகத்தின் சுகத்தை விரும்பும் மக்களும்
எம்மைச் சூழ்ந்த அறியாமைகளும்
எதற்கும் நடுங்கும் எமது மனங்களும்
நம்மோடு இருக்கும் நாட்கள் வரைக்கும்
நமக்கும் தியாகத் திருநாள் உண்டோ
- வேதாந்தி -

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நாட்டை இனபேதமற்ற தொழில்பேதமற்ற நாடாக மாற்ற பெருநாள் தொழுகையின் போது, இறைவனை இருகரமேந்திப் பிரார்த்திப்போம்

பெருநாள் வாழ்த்துச் செய்தியில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

எம்.எஸ்.எம்.சாஹிர்-

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறபுப்பாலை வெளியில் இப்றாஹீம் நபியவர்கள் நிகழ்த்திய தியாகமும் அதற்கு உறுதுணையாய் நின்று தன் இன்னுயிரைத் துறக்கத் துணிந்த இப்றாஹீம் நபியின் அருமைப் பாலகராம் இஸ்மாயீல் நபியின் மன ஓர்மையும் நினைவு கூரப்படும் நாளே ஹஜ்ஜுப் பெருநாளாகும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.அப்துல் றஸ்ஸாக்(ஜவாத்) விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச் செய்தியில்,

“இலட்சக்கணக்கான ஹாஜிகள் உலக சுகபோகங்களை மறந்து இறை நாட்டத்தை மட்டுமே மனதிலிருத்தி ஒன்று கூடியுள்ள இவ்வேளையில், நாட்டின் சாந்தி சமாதானத்துக்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் நலன் நோக்கத்திற்காகவும் பெருநாள் தொழுகையின் போது நாம் அனைவரும் ஒன்று கூடி, இந்த நாட்டை, இனபேதமற்ற, தொழில்பேதமற்ற, இலஞ்சம், ஊழல் துஷ்பிரயோகமற்ற நாடாக மாற்ற நாம் இருகரமேந்தி இறைவனைப் பிரார்த்திப்போம்.பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளரும், மட்டு. மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான முஹம்மத் றுஸ்வின்


தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளரும், மட்டு. மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான முஹம்மத் றுஸ்வின், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான தூதுவர்களாக முஸ்லிம் இளைஞர்கள் மாற இத்திருநாளில் உறுதி பூணவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

புனிதத்துவமிக்க ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது உளம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் - மனநிறைவும் அடைகின்றேன். 

நபி இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க செய்த தியாகங்களை உணர்த்தும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் நமக்கெல்லாம் பல படிப்பினைகளை கற்றுத் தருகின்றது. இதனை எமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்வோம். இந்நாளில் முஸ்லிம்களின் வாழ்வில் தியாக உணர்வு மென்மேலும் அதிகரிக்கட்டும். 

இன்று நாம் அனைவரும் நிம்மதியுடனும் - சந்தோசத்துடனும் வாழ்ந்து வருகின்றோம். இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு – நல்லிணக்கம் கடந்த காலத்தை விட முன்னேற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களது உறவினை வலுவூட்கட் கூடியவர்களாக முஸ்லிம் இளைஞர்கள் மாற இத்திருநாளில் உறுதி பூண வேண்டும். 

பல்லினமக்கள் வாழும் நமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் - நிம்மதியோடும் வாழ்வதற்கு பிரார்த்திப்பதோடு இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முனையும் தீய சக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கும் இறைவனிடம் வேண்டுவோமாக – என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் றயிஸத்தீன் ..

“தியாகத் திருநாளை நினைவுபடுத்தும் இப்புனித நாளில் அனைவருக்கும் எல்லா வல்ல இறைவனின் அன்பும் - அருளும் கிடைப்பதற்கு பிரார்த்திக்கின்றேன்” -என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் றயிஸ{த்தீன் தெரிவித்தார்
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:-
அல்லாஹ் மீதான நம்பிக்கை, அன்பு, அவனது கட்டளைக்கு அடிபணிதல், தியாகம், பொறுமை, கடமை என்பவற்றை நினைவுபடுத்தும் இத்திருநாளில் இவையாவும் எமது சமூகத்தில் மேலும் வலுப்பெற நாம் பிரார்த்திக்க வேண்டும்.
இவை நம்மத்தியில் வலுவற்றுப் போனமையே எமது சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாகும். இவை மேலும் வலுப்பெறுமானால் எமது சமூகம் மேலும் சக்தி பெறும். அத்தோடு, சகோதர இனங்களோடு பொறுமையாகவும் - அன்பாகவும் நடந்து கொள்ளும் அதேவேளை, அவர்களுடனான நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும் -என அவர் மேலும் குறிப்பிட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


எம்.ரீ. ஹைதர் அலி-

ம் முஸ்லிம் சமூகம் என்றுமில்லாத அளவு இன்று சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இன்று அகதிகளாக அந்நிய நாடுகளிலே பல மையில் தூரம் நடைபாதையாக சென்று தங்களது குழந்தைகளையும், உறவுகளையும் இழந்தவர்களாக குறிப்பாக தங்களது சொத்துக்களை இழந்து இன்று அகதிகளாக குடியேறுகின்ற ஒரு மிகப்பரிதாபகரமான ஒரு சூழ்நிலையிலேதான் நாம் இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம் என தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் அந்த மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக. குறிப்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும். ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் நாம் எமது இஸ்லாமிய விழுமியங்களையும், சிறந்த பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் குறிப்பாக தியாகத்தோடு நாங்கள் தியாகத்தைச் செய்து ஏனையவர்களுடன் வாழுக்கின்ற ஒரு சூழலை எம்மத்தியில் எமக்குள்ளே உருவாக்கிக் கொள்கின்ற ஒரு தியாக மனப்பாங்கை உருவாக்குகின்றதுதான் இந்த ஹஜ்ஜூப் பெருநாளாகும்.

ஏக வல்லோன் அல்லாஹுவின் இறைக்கட்டளையினை ஏற்று, பல்லாண்டு காலம் இறைவனிடத்தில் மன்றாடி கேட்டுப்பெற்ற தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை இறைவனுக்காக பலியிட தயாரான‌ அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்த இப்ராஹீம் நபியவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே அல்லாஹ் அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டான். படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பான் கொடுக்கச் செய்தான் இறைவன்.

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு எடுத்து நடக்க முடியுமோ அந்தளவு இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தர்களில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளான இந்த ஹஜ்ஜுப் பெருநாளில் நல்ல‌ எண்ணங்களோடு வாழ்ந்து மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக.

அந்த வகையில் இன்று நம்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியான சூழலும், சமாதானமும், இன ஒற்றுமையும் தொடர்ச்சியாக தொடர வேண்டும். நாம் அனைவரும் நிம்மதியோடும், ஒற்றுமையோடும் வாழ்வதற்காக ஏக வல்லோனான அல்லாஹ்விடத்தில் பிராத்திப்போமாக. மேலும் அனைத்து நாடுகளிலுமிருந்து இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்கமா நகருக்கு சென்றிருக்கும் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ்தஆலா ஆக்கியருள்வானாக என்ற பிரார்த்தனையோடு தனது வாழ்த்துச் செய்தியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களின் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தி!


NFGG ஊடகப் பிரிவு-மலர்ந்திருக்கின்ற ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். சிறப்பு மிக்க இத்தினத்தில் நம் அனைவரின் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.


உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு இத்தியாகத்திருநாளை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் இறைவனுக்காக புரியப்படுகின்ற தியாகங்களின் பெறுமதியினை இன்று அதிகம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நாம் நமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பிறரின் நலன்களுக்காகவும் மேம்பாடுகளுக்காகவும் அதிகம் அர்ப்பணிப்புகளுனும் தியாகங்களுடனும் செயற்பட முன்வரவேண்டும். நாம், நமது குடும்பம், நமது பிரதேசம் என்ற எல்லைகள் கடந்து உலகில் வாழுகின்ற அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் சிந்திக்க தலைப்படவேண்டும்.


இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி பல இன, மத மக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு ஏனையவர்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை, பாதிப்புகளை தங்களது சொந்த நலன்களுக்காகவும் அபிலாசைகளுக்காகவும் பலரும் சுயநலமாக இன்று பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் இறைவனின் கட்டளையை ஏற்று தனது சொந்த விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி சமூக மாற்றங்களுக்காக மாபெரும் தியாகங்களை நிகழ்த்திக்காட்டிய ஒரு குடும்பத்தின் வரலாற்றையே இஸ்லாம் இந்த தியாகத்திருநாளின் வாயிலாக நமக்கு கற்றுத்தந்துள்ளது.


இந்த தியாகங்களின் அடிப்படையில் நின்று பொது நன்மைகளுக்காக செயலாற்றுகின்ற சமூகமொன்றினை கட்டியெழுப்ப இன்றைய நாளில் நாம் திடசங்கற்பம் பூண வேண்டும். எனவே நாமும் நமது நாட்டிலும் உலகலாவிய ரீதியிலும் வாழுகின்ற அனைத்து மக்களினதும் மீட்சிக்காகவும் நல்வாழ்விற்காகவும் மானுட சுபீட்சத்திறகாகவும் நாம் இன்றைய நாளில் பிரார்த்திக்கவேண்டும்.


மீண்டும் அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

' ஈத் முபாரக்'
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வை.எம்.பைரூஸ்-
ன்று புனித ஈத்துல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் குறிப்பாக, கல்குடா வாழ் சகோதர, சகோதரிகள், இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் எம் உறவுகள், குடும்பத்தினருக்காகவும் இப்பெருநாள் தியாகத் திரு நாளாக அமைய வேண்டுமென வல்ல நாயன் அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்வதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கணக்கறிஞருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் விடுத்துள்ள தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜூடைய மாதத்தை அடைந்திருக்கும் நாம், அறபா நோன்பையும் நோற்று, அல்லாஹ்வின் நேசத்துக்குரிய நண்பரான நபி இப்றாஹீம் அலை அவர்களின் தியாக வாழ்க்கையை மையப்படுத்தி கடமையாக்கியுள்ள ஹஜ் கடமையையும் நிறைவேற்றி, அதனுடன் தொடர்புடைய நற்காரியங்களையும் செய்து, பெறுமதியான நன்மையைப் பெற முயற்சிக்க வேண்டும்.

இம்மாதமும் ஹஜ் கடமையும் கற்றுத்தரும் படிப்பினைகள், பாடங்களை நம் வாழ்வில் முடிந்தளவு எடுத்து நடக்க இறைவன் அருள்புரிய வேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு, அதற்காக நாமும் முயற்சிக்க வேண்டும்.


குறிப்பாக, பெருநாள் தினங்களில் வீணான விளையாட்டுக்களிலோ கேலி கூத்துக்களிலோ ஈடுபடாமலும், குர்பானுடை கடமைகளைச் செய்யும் விடயத்தில் இஸ்லாமிய வரையறைகளை மீறாமலும், நாட்டின் சட்டத்தை மதித்து நடப்பதுடன், அதனூடாக மாற்று மத சகோதரர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்வதிலிருந்தும் நாமும் தவிர்ந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், இன்று புனித ஈத்துல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் குறிப்பாக, கல்குடா வாழ் சகோதர, சகோதரிகள், இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் எம் உறவுகள், குடும்பத்தினருக்காகவும் இப்பெருநாள் தியாகத் திரு நாளாக அமைய வேண்டுமென வல்ல நாயன் அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்வதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கணக்கறிஞருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் விடுத்துள்ள தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஆதிப் அஹமட்-


தித்திக்கும் தியாகத்திருநாளில் தீனோர்கள் யாவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழத்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஹஜ்ஜுப் பெருநாள் தினமானது அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வதை அடிப்படையாகக் கொண்டது.
தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களின் குடும்பமும் அல்லாஹ்வை மாத்திரம் முன்னிறுத்தி செய்த தியாகத்தின் விளைவுகள்; உலகம் உள்ள வரை உலகப் பெரும் மகாநாடாம் அணைத்து தீனோர்களும் போற்றிப்புகழும் உன்னத நிலையை அடைந்தமைக்கு அவர்களிள் ஒப்பற்ற தியாகமே காரணமாகும்.
ஆக நாம் எல்லோரும் அல்லாஹ்விற்காக சிறு தியாகத்தையாவது செய்வது அல்லாஹ்விடத்தில் நமக்கு மிகப்பெரும் கூலியை நமக்குப் பெற்றுத்தரும்.மீண்டுமொரு முறை இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

னமத வாதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் - ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அஹமட் புர்க்கான்

இனமத வேறுபாடுகளை கழைந்து ஒருமித்த நாட்டிற்குள் சகலரும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேணி நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை இறைவன் உலகம் அழியும் வரை நினைவு கூறுகின்ற, அன்னவர்களை கண்ணியப்படுத்துகின்ற இப்புனித தியாகத்திருநாளில் நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடனானவர்களாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான அஹமட் புர்கான் தனது ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் பிளவுபடாத ஒருமித்த நாட்டிக்குள் இன ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி நாட்டின் வளர்ச்சிக்கு நாம் எல்லோரும் ஒற்றுமைமையை வித்திட வேண்டியதொரு காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் நாம் கடந்த கால கசப்பான விடயங்களை மறந்து மன்னித்து ஒருவரை ஒருவர் நேசிப்பவர்களாக மாறவேண்டும்.

நாட்டில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் எந்தவொரு சமூகமும் புறக்கணிக்கப்படாத வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் எனவும் சகல இனங்களுடைய கலை,கலாச்சார, விழுமியங்கள் பேணப்படுகின்ற வகையில் அவரவர் சமூகம் சார்ந்த வணக்க அநுஷ்டானங்களை நிறைவேற்றுகின்ற பூரண சுதந்திரத்தையும் நீதித்துறை சுயாதீனமாக இயங்கும் வகையில் ஆளும் நல்லாட்சி அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் இந்த நாளில் அரசை வேண்டிக் கொள்வதோடு குறிப்பாக முஸ்லிம்கள் தேசிய ஒற்றுமைக்கு ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் ஏனைய சமூகங்களுடன் நட்புறவை தொடர்ந்ததும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தனது ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -