மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து யாழில் மோட்டார் வாகன ஊர்வலம்-படங்கள்

 திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து இன்று காலை யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியினால் மோட்டார் வாகன ஊர்வலம் நடாத்தப்பட்டது.

இதன் போது யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான இராமநாதன் அங்கஜன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு அக்கட்சி காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதி,வேம்படி சந்தி ,சத்திரச்சந்தி வழியாக சென்று பின்னர் யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் அவ்விடத்தில் பட்டாசு கொளுத்தப்பட்டு தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அங்கு கருத்து தெரிவித்த அங்கஜன் மீண்டும் அரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.இதுவரை நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்து எங்கள் பிரதேசத்தை பின்தங்கி வைத்திருக்கின்றோம்.இனியும் அப்பிழைகளை விடாது அந்த அரியவாய்ப்பை எமது முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :