ந.குகதர்சன்-
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான கிரான் கோராவெளி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; உற்சவம் செவ்வாய்கிழமை மாலை இடம் பெற்றது.
திங்கட்கிழமை கும்பம் வைத்தலுடன் ஆரம்பித்து செவ்வாய்கிழமை திருக்குளிர்த்தி நிகழ்வு இடம் பெற்றதுடன், இறுதியில் பக்த அடியார்களால் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இவ் உற்சவத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாலயமானது கோராவெளி தாய் பந்தல், மிறாவோடை பந்தல், கிண்ணையடி பந்தல், கிரான் பந்தல், சந்திவெளி பந்தல், முறக்கொட்டாஞ்சேனை பந்தல், கோரகல்லிமடு பந்தல், சித்தாண்டி பந்தல், உட்பட பல கிராமங்களில் கொண்டனர்.
கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் ஆலயத்திற்கு வருகை தருகின்றன பக்தர்களின் நலன் கருதி குடிநீர், சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகளும் நடைபெற்றது.




