த.நவோஜ்-
சிறுபான்மை மக்களைப் பலப்படுத்தி எங்களை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கின்றார் என்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் பிரதி தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதான வீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் அனைவரும் அணிதிரண்டு எங்களுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் எங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அளிக்கின்ற வாக்குகளாகும்.
இன்று அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால ஸ்ரீசேனா, ராஜித சேனாரத்ன போன்றோர் வெளியேறியதால் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. அவர்கள் வெளியேறினாலும் கட்சி மிகவும் பலமாகத்தான் இருக்கின்றது. தற்போது உள்ள கட்சியின் பலத்துடன் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையும் தேர்தலில் வெள்ளப் போவது உறுதி. அந்த வெற்றியில் சிறுபான்மை மக்களாகிய நாங்கள் பங்காளிகலாக மாறிக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நடைபெறப் போகும் தேர்தலில் 90 வீதமான வாக்குகளை அளிக்கப் போவது உறுதி. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நிம்மதியாக வாழக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்ததற்காக நன்றிக் கடன் தீர்க்கும் நோக்கில் வாக்களிக்கப் போகின்றார்கள். அவ்வாறு சிறுபான்மை மக்களாகிய நாமும் யுத்தத்தால் கஷ்டப்பட்டவர்கள் என்ற ரீதியில் இன்று நிம்மாதியாக இருக்கின்றோம் என்ற ரீதியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிறைவேற்று அதிகாரி தேசமான்ய மங்கள சி செனரத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களான எஸ்.ஏ.றபீல், எஸ்.எம்.சந்திரபால, ஜனாதிபதி செயலக அதிகாரி பி.ஜி.தயானந்த மற்றும் பிரதேச தமிழ், முஸ்லிம் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment