இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலமர்வில் -தேர்தல் ஆணையாளர் பங்கேற்பு-படங்கள்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கான தேர்தல் நடைமுறைகள் பற்றிய செயலமர்வு பொலநறுவை மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவின் தவிசாளர். நீதிபதி பிரியந்த ஆர்.பி. பெரேரா தலைமையில் 15.12.2014 நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது தேர்தல்கள் ஆணையாளர். மஹிந்த தேசப்பிரிய கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதோடு. ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி. பிரதீபா மகா நாமஹேவா, ஆணையாளர் திரு.ரி.இ. ஆனந்தராஜா, ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர். சடடத்தரணி. நிமால் புஞ்சிஹேவா, ஆணைக்குழுவின் பணிப்பாளர். பிரசன்னா அரம்பத், ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர். ஏ.சி.ஏ.அஸீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தேர்தல்கள்; ஆணையாளர். மஹிந்த தேசப்பிரிய உரையாற்றியதோடு தேர்தல் பற்றிய பொலிஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -