வரலாறு காணாத மாற்றம் வரும் தேர்தல் வெற்றிக்குப்பின் -விஞ்ஞாபன வெளியீட்டுரையில் மைத்திரி

திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொள்ளும் வெற்றியுனூடாக வரலாறு காணாத புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் வைபவம் இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும் வன்முறைகளும், ஊழலும் அதிகரித்துள்ளதாகவும் இதன் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிர்வாகத்திற்கு எதிர்வரும் 08 ஆம் திகதி முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தற்போது தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கப்பட்டு தங்களது அரசியல் பிரசாரத்திற்கு தடைகளை ஏற்படுத்துவதாகவும் , எவ்வாறாயினும் தடைகளை தாண்டி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

“நூறு நாட்களில் புதிய தேசம்” எனும் தலைப்பில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.News1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -