ஜனா­தி­பதியை இன்னும் 40 வரு­ட­காலம் ஆட்­சியில் நிலைக்கச் செய்வோம்- இ.சர்வதேச பிக்குகள் முன்னணி

னது நாடு பற்றி எனக்­கில்­லாத அக்­கறை வெள்ளையர்­க­ளுக்கு ஏன்? என்று கேட்­ப­வரும் அதற்­க­மைய எவ­ருக்கும் அடி­ப­ணி­யாமல் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கும் முகம் கொடுத்து வெற்றி பெற்­ற­வ­ரு­மான ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை இன்னும் 40 வரு­ட­காலம் ஆட்­சியில் நிலைக்கச் செய்வோம் என்று அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர தர்­ம­ராஜ விகா­ரா­தி­பதி வல்­பொல பிய­நந்த தேரர் தெரி­வித்தார்.

இலங்கை சர்­வ­தேச பிக்­குகள் முன்­ன­ணியின் ஏற்­பாட்டில் இலங்கை மன்றக் கல்­லூரி கேட்போர் கூடத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

முன்பு நாட்டு மக்­களை வறுமை என்ற பெயரில் முடக்கி வைத்த தலை­வர்கள் தான் இருந்­தனர்.

அதற்கு மாறாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ சர்­வ­தேச சக்­திகள் மற்றும் புலம் பெயர் புலி உறுப்­பி­னர்­க­ளி­னது அழுத்­தங்­க­ளையும் எதிர் கொண்டு வெற்­றி­க­ர­மாக யுத்­தத்­தையும் நிறைவு செய்­த­தோடு விமான நிலையம், துறை­முகம், அதி­வேக வீதிகள் என்று இலங்­கையர் கன­விலும் நினைத்துப் பார்க்க முடி­யா­ம­லி­ருந்த பாரிய அள­வி­லான அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளார்.

இவ்­வா­றான ஒரு ஜனா­தி­ப­திக்கு சவா­லாக அணி­தி­ரண்­டுள்ள எதிர்த் தரப்பில் சந்­தி­ரி­காவின் பண்­டார நாயக்க குடும்பம் 49 வருடம் நாட்டில் அர­சியல் செய்­தி­ருந்த போது செய்­யாத அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மஹிந்த ராஜ பக் ஷ 9 வரு­டத்தில் செய்து காட்­டி­யுள்ளார். இவ்­வாறு இருக்­கையில்,

மீண்டும் முன்­னைய தலை­வர்கள் கூட்­டாக திரண்­டுள்ள எதி­ரணி ஆட்­சியை கைப்­பற்ற பார்க்­கி­றது. இதற்கு மக்கள் இட­ம­ளிக்க கூடாது. எமது தேவை மீண்டும் வறு­மை­யல்ல .நாட்டின் அபி­வி­ருத்­தியே எமது நோக்கம். இது தான் காலத்தின் தேவை­யா­கவும் அமை­கின்­றது.

முன்­னைய தலை­வர்­களின் கூட்டுச் செயற்­பாடு என்­பது என்­றுமே நடை­பெ­றாத ஒன்று. எதி­ர­ணியில் வெவ்­வேறு தலை­வர்கள் தான் கூடி­யுள்­ளனர். விரைவில் அந்தக் கூட்­டணி கலைந்து விடும். அதனால் மஹிந்­தவை ஆத­ரிப்போம். இன்று வெளி­நாட்­டவர் இலங்­கையின் உண்­மை­யான நிலையை அறிந்து கொண்­டுள்­ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -