சமூகத்தை ஈடுவைத்துவிட்டு ஓடியவர் ஆசாத் சாலி - உவைஸ் ரஷான் MPS

ம் சமூகத்தின் வெற்றிக்காக ஒன்றினைந்து கொழும்பு மாவட்டத்துக்கு சிறந்த சேவை செய்வார் என்று ஆசாத் சாலியை வாக்களித்து தெரிவு செய்து சபைக்கு அனுப்பிய பின்னர் தனது சுயலாபம் கருதி மக்களுக்கு துரோகம் பன்னி விட்டு அரசாங்கத்தின் பக்கம் வெளியேரிச் சென்றார்.

அதன் பின்னர் அங்கு இருந்து கொண்டு கூட இதுவரை அவரால் ஏதும் சேவைகள் செய்யப்பட்டதா என்றால் முழுவதும் சீறோவாக இருந்தது.
அங்கிருந்து அவரால் உழைக்க முடிய வில்லை மீண்டும் சுயலாபம் தேடி ஓடிப்போய் எங்கேயோ இருந்து கொண்டு ஈமான் இஸ்லாம் பேசுகிறார் இவருக்கு ஈமான் இஸ்லாம் தெரியுமா..?

இவரால் முஸ்லீம் சமூகத்துக்கு இதுவரை நடந்த இலாபம் என்ன?

மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று கூறும் இவர் கடந்த ஆட்சியில் அரசுடன் இருந்து கொண்டிருக்கும் போது முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதம், பள்ளிகளில் அதான் ஒலிக்க வைக்க முடியாது என்ற பிரச்சனைகளின் போது ஏன் இவரால் குரல் கொடுக்க முடிய வில்லை. ஏன் என்றால் அன்று இவருக்கு அரசுடன் இலாபம் கிடைப்பதனை பெற்றுக்கொண்டிருந்தார். அதனால் அங்கு எதுவும் பேசமுடியாமல் இருந்து விட்டு இப்போது அவரின் இலாபத்துக்காக சத்தம் போடுகிறார். 

அவரால் முடிந்தால் மீண்டும் கொழும்பில் தேர்தல் கேட்டால் படுதோல்வி அடையும் நிலை இருக்கிறது மக்கள் அவரை புறந்தள்ளி விட்டனர். அதனால் வெளி மாவட்டங்களுக்கு சென்று அங்கிருக்கும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் எனவே மக்கள் அவதானமாக ஆசாத் சாலி என்பவரை விரட்டி அடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என்று இன்று கண்டியில் நடந்த மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்ட பூஜாபிட்டி பிரதேச சபை உறுப்பினர் உவைஸ் ரஷான் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -