தனிநபர் ஆத்திரங்களைத் தீர்த்துக்கொள்ள ஊடகத்தை பயன்படுத்தாதீர்கள் -உவைஸ் MPS ஆவேஷம்

எம்.ஹிம்றாஸ்-

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதனை மலினப்படுத்துவதற்காக பிழையான தகவல்களை ஊடகங்களிற்கு வழங்குவது கவலைக்குரிய விடயமாகும் இவ்வாறு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நேற்று சபை மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உவைஸ் தெரிவித்தார்.

அவர் அங்கு தொட்ர்ந்தும் உரையாற்றுகையில், பிரதேச சபையில் ஊழல்கள் நடந்தால் அதனை தட்டிக்கேட்க வேண்டும்.எந்த உறுப்பினர் செய்தாலும் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் நடக்காத விடயங்களை நடந்ததாகக் கூறி பிரதேச சபையையும்,பிரதேச சபை உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தி மலினப்படுத்த முனைவது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

யார் பிழை செய்தாலும் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும். அதற்காக நாங்களும் குரல்கொடுப்போம். மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் இந்த சபைக்கு வந்திருக்கின்றோம். சிலரின் பிழையான ஊடக அறிக்கைகளால் பிழையான விடயங்களிற்கு நாங்களும் துனைபோகின்றோம் என்ற நிலைப்பாடு வருவதற்கு வாய்ப்பாகின்றது.

யாரோ சொல்லுகின்றார்கள் என்பதற்காகவும்,சிலரின் சந்தேகத்திற்கெல்லாம் ஊடகவியலாளர்களுக்கு அறிக்கை கொடுப்பது என்னைப் பொறுத்தவரை வெறுக்கத்தக்க விடயமாகும். நாம் சந்தேகப்பட்ட ஒரு விடயம் நன்றாக நடைபெற்றுள்ளது என்பது பின்னர் தெரியவருகின்றபோது ஊடகத்தில் வந்த செய்திகள் மாறவா போகின்றது.

இன்று சிலர் அட்டாளைச்சேனை பிரதேச சபையை ஏதாவது ஒரு வகையில் மலினப்படுத்த பார்க்கின்றனர். அதற்காக ஊடகங்களில் அவர்களுக்கு என்ன தோன்றுகின்றதோ அதையெல்லாம் எழுதுகின்றனர். ஊடகங்களில் எழுதினால் மற்றவர்களின் கௌரவம் ஒட்டுமொத்தமாக போகின்றது என நினைக்கின்றார்களாக்கும். நாங்கள் கௌரவமானவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக களத்தில் இறங்கி வேலை செய்கின்றவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்காக இல்லாத பொல்லாத விடயத்தையெல்லாம் இணைக்கின்றனர். எவர்கள் பொய்களை பரப்புகின்றார்களளோ அவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்தே தீரவேண்டும்.

எந்த விடயமாக இருந்தாலும் தவிசாளர் இருக்கின்றார் அதுபோல நாங்களும் இருக்கின்றோம் கலந்துரையாடுங்கள். ஒருவர் மீது வைக்கின்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் குற்றம் செய்தவருக்கு எதிராக நாங்களும் இணைந்து கொள்வோம். இன்று நமது சபையைப் பற்றி வருகின்ற செய்திகள் தொடர்பில் பொறுப்புக்கூறுகின்றவர்களாக நாம் இருக்கவேண்டும். செய்திகள் வந்ததன் பின்னர் அப்படி வரவில்லை இப்படி வந்திருக்கு என்று சொல்லுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஏனை பிரதேச சபைகளுக்கும் வழங்கப்படுகின்ற வாகன வசதிகளை எமது சபைக்கும் வழங்குமாறு அமைச்சர் அதாஉல்லாவிடம் பல தடவைகள் எமது பிரதேச சபை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. அவரும் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் இன்று வரை தரவில்லை.

எதிர்க்கட்சி உறுப்பினர்; றியாஸ் கொடுத்த பேட்டி ஒன்றில் அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைச்சர் அதாஉல்லாவிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். இது அப்பட்டான பொய்யாகும். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்ல தவிசாளர் மூன்று தடவைகள் அவரது அமைச்சுக்கு சென்றிருக்கின்றார்.

தொலைபேயில் அமைச்சருடன் கதைத்தபோது கட்டாயம் உங்களது சபைக்கு வாகனம் தரப்படும் என்று அமைச்சர் அதாஉல்லா உறுதியளித்திருக்கின்றார். இவ்வாறு நிலைமை இருக்கின்றபோது பிரதேச சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பேஸ்புக் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருப்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த சபையில் நாங்கள் பேசுகின்றபோது மற்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்வதை நிறுத்த வேண்டும். குறுக்கீடு செய்யும் உறுப்பினர் பேசுகின்றபோது நாங்கள் அவரின் பேச்சை குறுக்கீடு செய்வதில்லை. பாருங்கள் தவிசாளர் பேசுகின்றபோதும் குறுக்கீடு செய்கின்றார். இதனை அனுமதிக்க முடியாது. இந்த சபையைப் பற்றி பிழையான தகவலை பேஸ்புக் ஊடாக வழங்கியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :