ஓட்டமாவடி, அஹமட் இர்ஸாட்-
அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் பிரதம பாதுகாப்பு அதிகாரி மர்ஹும் MI.ஜுனைத்தீன்.IP அவர்களின் இரண்டாவது ஆண்டை முன்னிட்டு ஞாபகர்த்த கூட்டத்துடன் அன்னாரை கெளரவிக்கும் முகமாக இன்று சனிக்கிழமை (08.11.2014) வாழைச்சேன அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.கல்குடா பேரவையினாலும், அல்.அக்ஸா விளையாட்டு கழகத்தினாலும், வாழைச்சேனை பிரதேச சபையின் ஆணையாளர் SA.சிஹாப்தீனின் முயற்சியினாலும் வாழைச்சேனையில் உள்ள பிரபல்யமான வீதி ஒன்றுக்கு IP.ஜுனைத்தீன் என பெயரிடப்பட்டது.
வாழைசேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் ATT.மஜீட் மெளளவியின் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அன்னாருடைய பெயரில் யாஸீன் சூறா ஓதப்பட்டதுடன், மீராவோடை மன்ப உல்-ஹுதா அரபி கல்லூரியின் பணிப்பாளர் சட்டத்தரனி MSA. நவாஸ், முன்னால் பணிப்பாளர் LTM.இஸ்ஹாக் மெளளவி, ஓய்வு பெற்ற அதிபர் U.அஹமட், இனக்க சபை தலைவர் MUM.இல்யாஸ், வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் அதிபர் A..ஜீவன், வாழைச்சேனை பிரதேச சபையின் ஆணையாளர் SA.சிஹாப்தீன் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதோடு, மர்ஹும் ஜுனைத்தீன் IP அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ,பொதுமக்கள் என பலரும் வருகை தந்திருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment