த.நவோஜ்-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் கண்டல் தாவரங்களை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில் பாடசாலை மட்ட விழிப்புணர்வு செயற்திட்ட நிகழ்வும், விழிப்புணர்வு ஊர்வலமும் சனிக்கிழமை வாகரையில் இடம் பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள கரையோரம் பாதுகாப்பு திணைக்களம், கல்குடா கல்வி வலயத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது.
வாகரை கோறளைப்பற்று வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் தலைமையில் வாகரை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா, வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்திட்ட இணைப்பாளர் எஸ்.கேகுலதீபன், கல்குடா கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி.சு.குலேந்திரகுமார், ரீ.அனந்தரூபன் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பேரணியானது வாகரை பிரதான வீதியில் இருந்து ஆரம்பமாகி வாகரை மகா வித்தியாலயம் வரை சென்றது.
கரையோரம் பேணல் திணைக்களத்தினால் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும், அதிதிகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment