![]() |
| முதலாம் பரிசு வழங்கும் போது.... |
![]() |
| 2ஆம் பரிசு வழங்கும் போது... |
![]() |
| 3ஆம் பரிசு வழங்கும் போது........ |
![]() |
| ஆறுதல் பரிசுகள் 10 |
பைஷல் இஸ்மாயில்-
இம்போட்மிரர் நிறுவனம் நாடளாவிய ரீதியில் நடாத்திய மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (09) அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினரும், இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான தேசகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்த கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலய மாணவி அலியார் சுல்பிக்காவுக்கு துவிச்சக்கர வண்டியும் சான்றிதழும், இரண்டாம் இடம்பெற்ற இறக்காமம் அஷ்ரப் தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன் முஹம்மட் இல்காமுக்கு மின் விசிறியும் சான்றிதழும், மூன்றாமிடம் பெற்ற அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையைச் சேர்ந்த மாணவி பாத்திமா சர்பானாவுக்கு 3 ஆயிரம் பெறுமதியான பண வவுச்சரும் சான்றிதழும், ஆறுதல் பரிசாகா 10 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபா பெருமதியான பண வவுச்சர்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.ராசிக், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யூ.கே.ஜபீர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபுர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறக்கத்துல்லாஹ் மற்றும் உதவித் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பண வுச்சர் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment