நெஞ்சமெல்லாம் நீயே...

முன்னாள் பிரதியமைச்சரும்
மூதூர் முதல்வருமான
மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத்
அவர்களின் 27வது
வருட நினைவு
தினம் (13.11.2014)

காலவனும் விதியவனும் கதைத்துப்; பேசி நிலத்தடிச் சுரங்கத்தினுள் சிறை பிடித்துச் சென்றாலும்....
கடல் அலைகளும் அழித்து விடாது உன் காலடிச் சுவடுகளை..!
சுட்டெரிக்கும் சூரியனும் எரித்து விடாது உன் நினைவுச் சின்னமதை .......
அரசியலுக்குள்ளே நித்தம் நித்தம் நின்டெரிந்த எரிமலையே..!
நற்பைப் பயக்கும் உன் நல்லாட்சித் தத்துவத்தால் புதுமைகள் பல செய்த புரட்சித் தலைவனே....!

அரசியல் சானாக்கியங்கள் கைதேர்ந்த செம்மளே ......!
அன்பால் நின் மக்களை அரவனைத்த முத்தான முதல்வரே.....!
சலைக்காமல் எப்போதும் மூதுரோடு இணைந்தவரே....!
வீதியில் நீ கை வீசி நடந்து வரும் அழகிலே ....!
கண்முன்னே அரசியல் வீரம் வந்து ஒளிருமே....!

அன்பான உன் கரவனைப்பிற் காட்படாது......!
பண்பான நின் பாச வலைக்குட்படாது நின்று வாழ்ந்தோர் எவருமில்லை...! நின் தொகுதி மூதூரிலே.....
பிரலையமாய் அரிசியல் பகைக்குள்ளே புகுந்து விளையாடிய தானைத் தளபதி தன்மான தலைமகனே..!
மஜிட் நானா உன் பெயரை முழு மாநிலமும் போற்றட்டுமே...!
நின்பாதம் பதிந்திடாதுன்டோ எம் பிரதேசம் பதியதனில்..... கொட்டியாபுரம் முதல்; அகில உலகம் வரை போற்றிடுமே உன் பெருமையை...... இன்றைக்கும் உன் பெயர் கூட அரசியல் எதிரிகளை நிலை குலைத்திடுமே....

கிழக்கின் விடிவுக்காய் எப்போதும் அஞ்சாமல் முன்னின்று முழங்கிய இன் குரல் இன்றும் ஒலித்திடுதே....
அரசியல் தோல்வி கண்டு அனுகளவும் குறையாமல் ஓய்வின்றி பணிபுரிந்த உயர் சீர் ஒப்பற்ற கலைமகனே...!
கருத்துக்கள் பிறப்பிக்கும் கனீரென்ற உன் குரலின்..... கிட்ட வரும் எதிரிகளும் மனம் நெகிழ்ந்து போயிடுமே....
கண்ணுக்கு கண்ணாய் இருந்து எம்மைக் காத்த தளபதியே.... எம் மன்னுக்குப் பெருமை சேர்த்த மாசற்ற காவியமே.... உந்தன் இதயத் துடிப்பு அடங்கும் வரை எம்மைப் பற்றியே நினைத்தவரே.....!
துன் நிணைவு சுமந்து என்னாலும்; ஏங்கி வாடிடுதே என் மனமே....!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :