மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முஸ்லீம் வர்த்தகர்களின் அன்பளிப்பு-படங்கள்.


பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் இலகுவான முறையில் வைத்தியாலையிலுள்ள சேவை பிரிவுகளை அடையாளம் காண்பதற்கு தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் பெயர் பலகைகள் மற்றும் டி.வீ.டி. பிலேயர் (எண்ணியல் ஒளிக்காட்சி ) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட பெயர் பலைகள் மற்றும் டி.வீ.டி. பிலேயர் (எண்ணியல் ஒளிக்காட்சி ) ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த பொருட்கள் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவரும்,சமூக சேவையாளரும்,மட்டு-பிலால் எம்போரியத்தின் உரிமையாளருமான கே.எம்.எம்.கலீலினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பரீட்டிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :