திவிநெகும திணைக்களத்தின் தேசிய சம்மேளன அங்குரார்பண நிகழ்வு எதிவரும் 21ம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளன.
இந்த அங்குரார்பண வைபவத்தில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சேசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் நாடு பூராகவுமுள்ள 06 திவிநெகும வலயங்களிலுமுள்ள 1074 திவிநெகும சமுதாய அடிப்படை வங்கிப் பிரிவுகளிலுள்ள சுமார்(40000) நாற்பதாயிரம் சமூக மட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், திவிநெகும திணைக்கள அதிகாரிகள், நாடு பூராகவுமுள்ள மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அம்பாறை மாவட்ட திவிநெகும பிரதிப்பணிப்பாளர் ஐ.அலியார் தெரிவித்தார்.
இந்த தேசிய சம்மேளன அங்குரார்பண நிகழ்வின் போது திவிநெகும திணைக்கத்தின் எதிர்கால அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் வாழ்வாதார அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பன தாடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் அவற்றில் சமுகமட்ட அமைப்புக்களின் பங்களிப்பு, பொதுமக்களின் பங்களிப்புக்கள் தொடர்பாகவும் விரிவாக விளக்கப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
.jpg)
0 comments :
Post a Comment