இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் எனும் கிராமத்தில் 11.11.2014 அன்று செவ்வாய்கிழமை பாட்டாளிபுரம் பொது மண்டபத்தில் காலம் கடந்த திருமணப்பதிவுச் சான்றிதல் வழங்கும் நிகழ்வு மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் 25 சோடிகள் கலந்துகொண்டு தங்கள் திருமணப்பதிவினை பெற்றுக்கொண்டனர்.குறித்த நிகழ்வு மூதூர் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.கிருஸ்ணபிரியன் அவர்களின் வழிகாட்டலின் படி இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் நிலையத்தின் சட்டத்தரணியான முகம்மது லத்தீப் பைஸர் அவர்களின் தலைமையில் ஏனைய உத்தியோகத்தர்களான சட்டத்தரணி அனஸ் ருக்ஸானா பானு மற்றும் முகாமைத்துவ உதவியாளர் செல்வி.சுபாஜினி, திட்ட உத்தியோகத்தர் திரு.கோபிகண்ணன்ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பங்குபற்றிய பயனாளிகள் கருத்து வெளியிடுகையில் திருமணப் பதிவின் முக்கியத்துவம் பற்றிய போதிய அறிவின்மை மற்றும் வறுமை போன்ற காரணங்களால் அதனை பெறுவதில் பாரிய சிரமப்பட்டதாகவும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஊடாகவே குறித்த ஆவணம் பெற முடிந்ததாகவும் கூறினார்.
குறித்த திருமணப்பதிவினூடு இதுவரை காலமும் தம்பதியினருக்கு வழங்கப்படாத சட்ட அந்தஸ்தும் பிள்ளைகளுக்கான சட்ட உரிமையும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தம்பதியினர் சட்டமுரணான திருமணக்குலைவு செய்வதிலிருந்து பரஸ்பரம் பாதுகாப்பு வழங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாவும் சட்டத்தரணி முகம்மது லத்தீப் பைஸர் அவர்கள் குறித்த நிகழ்வில் கருத்து வெளியிட்டார்.
குடிசார் ஆவணங்களின் பாதுகாப்பு பொறிமுறை மற்றும் மூல ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய தெளிவுரை ஒன்று சட்டத்தரணி அனஸ் ருக்ஸானா பானு அவர்களால் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment