இன்று எமது கட்சி மூட்டிய சிறு நெருப்பு!ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மொஹிடீன் பாவாவின் அறிக்கை

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

அன்புக்கினிய வாக்காளப் பெருமக்களே…

இன்று எமது கட்சி மூட்டிய சிறு நெருப்பு, கிழக்கு பிர தேசம் முழுவதும் இளைஞர்களின் ஆதரவில் ஊழித் தீயாய் வளரத்தொடங்கிவிட்டது. இருண்டு கிடக்கும் அரசியல் வானத்தில் நம்பிக்கை வெளிச்சம் இருள் கிழிக்கும் வைர ஊசிகளாய் கண்சிமிட்டும் இந்த நேரத்தில் வாக்காளர்களாகிய நாம் மலிவு விலையில் நம் வாக்குகளை விற்றுவிடலாகாது.

சின்னஞ்சிறு நெருப்புத் துண்டு அடர்ந்துகிடக்கும் இருங்காட்டை அழிக்கும் பெரு நெருப்பாய்ப் பெருக வேண்டும் எனில், காற்றுஅதிகமாக வீச வேண்டும். நம் சமூகத்தைச் சகல தளங்களிலும் பாழ்படுத்திடும் ஊழல், அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்எனில், முதலில் சமூகப் பொறுப்பு மிக்கவர்கள் சிறு நெருப்பாய் புறப்பட வேண்டும். மக்கள் ஆதரவுக் காற்று வலிமையாக வீசத்தொடங்கி, இந்த சிறு நெருப்பு கால நடையில் பெரு நெருப்பாய் கனன்று ஊழல் குப்பைகளை ஒட்டுமொத்தமாக சுட்டுப்பொசுக்கிவிடும்

‘நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும்?’ என்று வழிகாட்டும் தகுதி எனக்கு இருப்பதாக நான்நம்பவில்லை. என் தலைக்குப் பின்னால் எந்த ஒளிவட்டமும் இல்லை என்பதை நன்றாக நான் அறிவேன். சமூகப் பொறுப்புஉணர்வு மிக்க ஒரு சாதாரண மனிதனாக உங்களிடம் மனம் திறக்க விரும்புகிறேன். தேர்தலில் உங்கள் வலிமை மிக்கவாக்குரிமையைப் பயன்படுத்த வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு முன்பு, நிதானமாக நின்று கொஞ்சம் சிந்திக்கவேண்டுகிறேன்!

‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?’ என்று பாரதி அன்றுபதறித் துடித்தான். அவன் அஞ்சியபடியே, இன்று நம் கண் முன்னால் ஜனநாயகப் பயிரைக் கள்ள ஆடுகள் மேய்ந்து திரிகின்றன.நம் மூதாதையர் ஓராயிரம் தியாகம் செய்து நமக்குப் பெற்றுத் தந்த ஜனநாயகப் பயிரை, இந்த மலினமான ஆடுகள் முற்றாகமேய்ந்துவிடுவதற்கு முன்பு நாம் விழிப்பு உணர்வு பெற்றாக வேண்டும்.

ஜனநாயக அமைப்பில் நம் வாழ்க்கை விதியை வரையறுக்கும் உரிமை நம்மிடம்தான் உள்ளது. நம் கையில் வழங்கப்பட்டவாக்குச் சீட்டுதான் நம் வாழ்வை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டு, ஒரு கணத்தில் நாம் தவறான முடிவு எடுத்து… மோசமானமனிதர்களுக்கு வாக்கு அளித்தால், அதன் பயனாகப் படை எடுக்கும் தீய விளைவுகளை நாம்தான் ஐந்து ஆண்டுகள் முழுவதும்அனுபவித்தாக வேண்டும். வரங்களோ, சாபங்களோ, வானத்தில் இருந்தபடி ஆண்டவன் அளிப்பது இல்லை. வாக்கு அளிக்கும்முறையின் மூலம் நாம்தான் அவற்றை நமக்கு வழங்கிக்கொள்கிறோம்.

‘எந்த நெறிமுறைக்கும் உட்பட்ட சட்டத்தையும் நான் அரசியலில் அங்கீகரிப்​பது இல்லை. அரசியல் ஒரு விளையாட்டு. அதில்எல்லா விதமான தந்திரங்களும் ஏற்கப்படும். அரசியல் விளையாட்டில் பங்கேற்பவரின் வசதிக்கு ஏற்ப சட்டங்கள்வளைக்கப்படும்’ என்ற ஹிட்லரின் வழித் தோன்றல்களுக்குத்தான் நாம் இங்கே வழிபாடு நடத்துகிறோம். நேர்மையின் நிறம்மாறாமல் நெறி சார்ந்து அரசியல் நடத்த, 2 கோடி மக்களில் 245 உறுப்பினர்களை நம்மால் கண்டெடுக்க முடியவில்லை என்பதுஎவ்வளவு பெரிய அவலம்!

தனி மனித ஒழுக்கமும், தன்னல மறுப்பும், எளிமை தவழும் வாழ்வும், மக்கள் நலனில் முழுமையான நாட்டமும், ஊழலற்றநேரிய நிர்வாகத் திறனும் நிறைந்த தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு கசப்பான உண்மை!

மேலான சமூக லட்சியங்களை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு பிறந்த இயக்கங்கள் இன்று செயலற்றுப்போய்விட்டன. கோட்டை நாற்காலிக் கனவுகளுடன் பிறந்த கட்சிகள், கொள்கைகளைக் கைவிட்டுவிட்டன. ஒவ்வொருகட்சியும் ஆட்சி நாற்காலியில் ஆசைவைப்பது மக்களின் ஏழ்மையை அகற்றுவதற்காக அல்ல. அமெரிக்காவில் இரண்டுகட்சிகள். பிரிட்டனில் மூன்று கட்சிகள். நம் இலங்கை மண்ணிலோ நூற்றுக் கணக்கு கட்சிகள். இங்கே மனிதர்களுக்கு, உணவு ஆடை இல்லை. ஆனால், பல்வேறு வண்ணங்களில் கட்சிக் கொடிகள் விண்ணளாவப் பறப்பதில் குறைவே இல்லை.

‘கட்சி என்பது தங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் மூலம் நாட்டு நலனைப் பெருக்குவதற்கு, கூட்டு முயற்சிமேற்கொள்பவர்களின் தொகுப்பு’ என்றார் அறிஞர் எட்மண்ட் பர்க். இலங்கை மண்ணில் தேச நலனை நெஞ்சில் நிறுத்திநடமாடும், நாடாளுமன்ற உறுப்பினர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நாட்டு நலனைவிட, ஒரு கட்சியின் நலனும்,கட்சியின் நலனைவிட, ஒரு தலைவரின் குடும்ப நலனும் போற்றப்படுவதுதான் நம் ஜனநாயக அமைப்பில் நேர்ந்துவிட்ட மிகப்பெரிய வீழ்ச்சி.

ஜனநாயகத் தேவதையின் மூச்சுக் காற்றுதான் தேர்தல். முறைகேடுகள் முற்றுகையிடாத தேர்தலை இனி நாம் காணக்கூடும்என்ற நம்பிக்கை நசிந்துவிட்டது. பண பலம், அடியாள் பலம், அதிகார பலம் ஆகிய மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித்தரும் என்றால், உண்மையான ஜனநாயகம் எப்படி உயிர் வாழும்? நேர்மையும், உண்மையும், சமூகப் பொறுப்புஉணர்வும்கொண்ட நியாயமான மனிதர்கள் தேர்தலில் எப்படி நிற்க முடியும்?

‘ஜனநாயகம், அரசன் ஆட்சியைவிட இழிவானது. ஜனநாயக அமைப்பில் எண்ணிக்கையின் முன் திறமை பலியிடப்படுகிறது.தந்திரங்களால்தான் எண்ணிக்கை உருவாக்கப்படுகிறது. பாமர மக்கள் மிக எளிதில் திசை திரும்பக்கூடியவர்கள்; கருத்தளவில்திடசித்தம் இல்லாதவர்கள்’ என்று 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பிளேட்டோ சொன்னதை இன்று நாம் நியாயப்படுத்திக்கொண்டுஇருக்கிறோம். சிறு சம்பள உயர்வுகளால் தற்காலிக பொருள் விலை குறைப்பினால் இலவசங்களுக்காக
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :