ஜே.வி.பி. மீண்டும் வரலாற்றுத் தவறிழைக்குமா?

திர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஜே.வி.பி. போராடி வருகின்றது. மற்றபடி ஒருவருக்குப் பதிலாக இன்னொருவரை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதில் ஜே.வி.பி. க்கு உடன்பாடில்லை.

எனவே அரசியலமைப்பை மாற்றி, ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கான போராட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபட ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக தற்போதைக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவை வழங்குவதில்லை என்று ஜே.வி.பி. உயர்பீடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் குழுவை கூட்டி, உரிய முறையில் ஊடகங்களுக்கும் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே வரலாற்றுத் திருப்புமுனையான காலகட்டத்தில் ஜே.வி.பி. இவ்வாறான ஒரு முட்டாள்தனமான தீர்மானத்தை எடுப்பது மஹிந்தவுக்கு ஆதரவான நடவடிக்கையாகவே மாற்றம் பெறும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு தேர்தலிலும் ஜே.வி.பி.யின் ஆதரவைக்கொண்டே மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :