மாமி இல்லாத பூமி' சிறுகதை தொகுப்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-

போர்க்; காலச் சூழலின் வாழ்கை முறைமைகளைத் தளமாகக் கொண்டு பல சிறுகதைகள் புனையப்பட்டிருக்கின்றன. இதில் வறுமையின் துயரங்களில் வாடுகின்ற மக்களின் நிலைகள் பிரதிபலிக்கின்றன சமூக முரன்பாடுகளை வெளிக்கொண்டு வருவதற்கு பல முயற்சிகளை ஹமீட் எடுத்திருக்கின்றார். இவ்வாறு தெரிவித்தார் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா

இலங்கையின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றவருமான மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.ஆர்.அப்துல் ஹமீட் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'மாமி இல்லாத பூமி' நூல் வெளியீட்டு வைபவம் அண்மையில்; (2014-11-15) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆய்வுரை நிகத்திய போதே பேராசிரியர் செ.யோகராசா இதனைத் தெரிவித்தார்;

ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தரும் கவிஞருமான எம்.பி.ஏ.ஹசன் (மருதமுனை ஹசன்)தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பேராசிரியர் செ.யோகராசா மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-

இலங்கையின் சிறுகதை வரலாற்றிலே மருதமுனையின் பங்களிப்பு மகத்தானது. மருதூர் கொத்தன் தொடக்கம் றியாஸ் அஹமட் (அம்றிதாஏஎம்) வரை பல எழுத்தாளர்களை மருதமுனை தந்திருக்கின்றது. சிறுகதைக்கும்,கவிதைக்கும் பெயர் பெற்ற எழுத்தாளர்களைக் கொண்ட மருதமுனையில் பேசக் கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.

ஈழத்து சிறுகதை வரலாற்றிலும்,கிழக்கிலங்கை சிறுகதை வரலாற்றிலும் 'மாமி இல்லாத பூமி'சிறுகதைத் தொகுப்பைத் தந்த ஏ.ஆர்.ஏ.ஹமீட் அவர்களுக்கு என்ன
இடம் என்ற இடத்தில் நின்று கொண்டு இந்த தொகுப்பைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

சுpறகதைகள் பற்றிய மனப் பதிவுகளை தொகுப்புக்களைப் பார்கின்ற போது சிறுகதை வரலாற்றின் பின்னணியை ஒரளவேனும் தெரிந்து கொள்வது பொருத்தமாகும்.ஈழத்திலே சிறுகதை என்பது 1930களில் தோற்றம் பெற்றாலும் இந்த நாட்டுக்குரிய மக்களுக்கான சிறுகதைகளின் தோற்றம் என்பது 1950களில் தான் என்று சொல்லலாம்.

1950களில் தோற்றம் பெற்ற சிறுகதைகளின் எழுத்தாளர்கள் முற்போக்கு அணியைச் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றார.கள். அந்த முற்போக்கு அணியிலே மருதமுனையைச் சேர்ந்த மருதூர் கொத்தனுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. 

அதே போன்று கிழக்கிலங்கையின் கவிதை வரலாற்றிலே நீலாவணன் என்ற முக்கிய ஆளுமை பல கவிஞர்களை உருவாக்க பெரம் பங்காற்றி இருக்கின்றது. அதே போன்று சிறுகதை வரலாற்றிலே மருதூர் கொத்தன் என்ற ஆளுமை பல சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கின்றது என்பதற்கு ஒரு சான்றாக ஏ.ஆர்.அப்துல் ஹமீதுடைய 'மாமி இல்லாத பூமி' சிறுகதைத் தொகுதி காணப்படுகின்றது.

முற்போக்கு சிந்தனையுடைய மருதூர் கொத்தனின் 'ஒளி' என்ற சிறுகதையை ஆழமாக வாசிககின்ற போது அந்த முற்போக்குச் சிந்தனை வெளிப்படும். அதே போன்று 1970களுக்குப் பின்னர் மனஉணர்வுகளை, மனிதநேயத்தை வெளிக் கொண்டுவரக் கூடிய சிறுகதைகளை சண்முகம் சிவலிங்கம், உமாவரராஜன் ஆகியோர் படைத்திருக்கின்றார்கள்.

1980ம் ஆண்டுக்குப் பின்னரான சிறுகதை, கவிதைப் படைப்புக்கள் பேரின வாதத்திற்கு எதிரானதாகவும்,போர்ச் சூழல் பற்றிய வெளிப்பாடுகளையும்,மன அழுத்தங்கள், பெண்களின் மனக்குமுறல்கள் கொண்டதாகவுமே வெளிவந்திருக்கின்றது. இக்காலப் பகுதியில் 'மாமி இல்லாத பூமி'நூலாசிரியர் எழுதத் தொடங்கியிருக்கின்றார். இந்தத் தளத்தில் நின்று பார்க்கின்ற பொது அப்போது இருந்த இனமுரன்பாடு, யுத்த சூழல்,தமிழ்,முஸ்லிம் மக்கள் பட்ட துன்பங்கள் இவற்றின் பின்னணியிலேயே இவரது கதைகள் எழுதப்பட்டிருக்கின்றது.

ஓட்டுமொத்தமாக மருதூர் கொத்தனின் இறுதிக்கால வாரிசாக ஏ.ஆர்.ஏ.ஹமீட் அவர்களைப் பார்க்க முடிகின்றது.

என்.எம்.எம்.இஸ்மாயில் அறிமுக உரையையும், கவிஞரும் அதிபருமான ஏ.ஆர் நிஃமத்துல்லா விமர்சன உரையையும,; கிழக்குப்; பல்கலைக் கழக பேராசிரியர் செ.யோகராசா ஆய்வுரையையும், ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம் பிர்தௌஸ் நயத்தல் உரையையும் நிகழ்த்தினார்கள். நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் பிரதம அதிதிக்கு வழங்கினார். ஆசிரியரும் கவிஞருமான எம்.எம்.விஜிலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :