எஸ்.எல்.மன்சூர் அவர்களின் பதிவுகளின் சங்கமம் நூல் அறிமுக விழா பொத்துவிலில்



பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

க்கரைப்பற்று வலயக் கல்விப்பணிமனையின் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் அவர்களின் பதிவுகளின் சங்கமம் நூல் அறிமுக விழா இன்று 2011.11.12  பொத்துவில் மத்திய கல்லூரியில்  நண்பர்கள் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சிறப்பதிதியாக பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ. புஹாரி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  நூலின் முதல் பிரதியினை பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி ஆசிரியர் எம்.ஏ.தாஜகான் மற்றும் ஏ.எல்.அனிஸ் அலி  அவர்கள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.அபுதாகீர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஏ.எல் இப்றாகீம் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

படத்தில் நூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர் அவர்களிடம் இருந்து அதிபர் எம்.ஏ. புஹாரி  நூலினை பெற்றுக் கொள்வதையும் நூலாசிரியர் சிறப்புரை நிகழ்த்துவதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :