புதிய தகவல் அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமை ஏமாற்றினாரா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் கூட்டாக களமிறங்கியமை தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளிவந்துள்ளன. தாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது பெரும் தப்பாகப் போய் விட்டதாக அண்மையில் நடந்து முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் அரசியல் பீட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் திரிகரண சுத்தியுடன் ஐக்கியப்பட்ட நிலையிலேயே ஊவா தேர்தல் களத்தில் நின்றோம். ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உள்நோக்கம் எமக்கு தெரியாமல் போய் விட்டது. நாங்கள் ஏமாந்து விட்டோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து ஊவாவில் போட்டியிடுங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அரசாங்கமே ஆலோசனை வழங்கியிருந்தது. அதனடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் இணைந்து இன்று எம்மை ஏமாற்றி விட்டனர்.

அரசின் திட்டத்தின் கீழ்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எங்களுடன் இணைந்து போட்டியிடுகிறது என்ற விடயத்தை ஊவா தேர்தல் இடம்பெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்னரே நாம் தெரிந்து கொண்டோம். ஆச்சரியமடைந்தோம். ஆனால், எம்மால் ஒன்று ஒன்று செய்ய முடியாத நிலையிலேயே தேர்தலில் கூட்டாக நின்றோம் என முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் அரசியல் பீட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் உண்மை நிலைமை என்னவென்றுதான் தெரியாமல் உள்ளது.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :