மருதமுனை ஏ.ஆர்.அப்துல் ஹமீட் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'மாமி இல்லாத பூமி

 பி.எம்.எம்.ஏ.காதர்-

லங்கையின் முக்கிய  சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றவருமான மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.ஆர்.அப்துல் ஹமீட் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'மாமி இல்லாத பூமி' நூல் வெளியீட்டு வைபவம் எதிர் வரும் 2014-11-15ம் திகதி மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தரும்  கவிஞருமான எம்.பி.ஏ.ஹசன் (மருதமுனை ஹசன்)தலைமையில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, மின்சார, வீடமைப்பு, அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மட்டக்களப்பு தொழில் நீதிமன்ற நீதிபதி வி.எம்.சியான், சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தீன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

விஷேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல,; பொறியிலாளர் நியாஸ் ஏ சமட,; மர்ஹூம் ஏ.ஆர்.ஏ. அஸீஸ் நிதியத்தின் தலைவரும,; விரிவுரையாளருமான ஏ.ஏ.நுபைல், மர்ஹூம் மருதூர் கொத்தன் நிதியத்தின் பணிப்பாளர் ஏ.ஜி. கலீலுர் றகுமான், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,எம்.எஸ்.உமர் அலி,ஏ.எல்.எம்.முஸ்தபா, அல்-மருதமுனை சஞ்சிகையின் ஆசிரியர் எம்.சி.எம்.அப்துல் காதிர்  ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

என்.எம்.எம்.இஸ்மாயில் அறிமுக உரையையும், கவிஞரும் அதிபருமான ஏ.ஆர் நிஃமத்துல்லா விமர்சன உரையையும,; தென்கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம்.அஸ்ரப் ஆய்வுரையையும், ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம் பிர்தௌஸ் நயத்தல்  உரையையும் நிகழ்த்தவுள்ளனர். பாடகர் மருதமுனைக் கமால்  இஸ்லாமிய கீதங்களைப பாடவுள்ளார், ஆசிரியரும் கவிஞருமான எம்.எம்.விஜிலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :