ஹாசிப் யாஸீன்-
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (17) திங்கட்கிழமை இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை மு.கா உறுப்பினர்கனான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, எம்.ஐ.எம்.றனூஸ், வீ.ரி.நஜீம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் 25 சிவில் அமைப்புகளிலுள்ள வறிய குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபா பெறுமதியாக வாழ்வாதாரப் உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் சம்மாந்துறை பிரதேச 8 வீதிகளுக்கான மின்சார இணைப்பினை வழங்குவதற்கு 10 இலட்சம் ரூபா நிதியினையும் வழங்கி வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment