பொத்துவில் காதி நீதிமன்ற விசாரணைகள் புதிய காதி நீதிபதி தலைமையில்.

பொத்துவில்செய்தியாளர் எம்.ஏ.தாஜகான்-


பொத்துவிலில் இயங்கிவந்த காதி நீதிபதியின் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, தடைப்பட்டிருந்த காதி நீதிமன்றப் பணிகள், புதிய காதி நீதிபதியின் தலைமையில், கடந்த 08ஆம் திகதி, புதிய காதி நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பொத்துவில் பிரதேசத்தின் 7ஆவது காதி நீதிபதியாக ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ்.முஹத்திஸ்மாயில் முகம்மது செரீப், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நிய மிக்கப்பட்டதையடுத்து, கடந்த 08ஆம் திகதி முதல் அவர், தமது பணிகளை ஆரம் பித்துள்ளார். கடந்த சனிக்கிழமை(15) முதல் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பொத்துவில் பிரதேச காதி நீதிமன்றம், இதுவரை காலமும் தனியாருக்குச் சொந்த மான கட்டிடங்களிலேயே இயங்கிவந்துள்ளது. தற்போது, நீதி அமைச்சின் 25 இலட் சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், பொத்துவில் பி-3 கிராமசேவகர் பிரிவில், ஜலால்தீன் சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, சகல வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத் தொகுதியில் கடந்த 08ஆம் திகதி முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் இதுவரை 6 காதிநீதிபதிகள் பணியாற்றி உள்ளமையும், அஸ்-செய்யித் அப்துல் ரஸாக் மௌலானா, எம்.எம்.முஸ்தபா, எம்.ஐ.எம்.இப்றாஹிம், எம்.எம்.இப்றாஹிம், கே.எம்.ஹஸன், அஸ்-செய்யித் அப்துல் காதர் மௌலானா ஆகியோரே அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் உள்ளிட்ட காதிநீதி மன்றங்கள், நாட்டில் இயங்கும் நீதிமன்றக் கட்ட மைப்புக்குள் வரும் 8 நீதி மன்றங்களுள் ஒன்று என்பதும், இது முஸ்லிம்களின் விவாக, விவாகரத்து தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் நீதிமன்று என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :