அஸ்ரப் ஏ. சமத்-
காணி அபிவிருத்தி அமைச்சர் ஜாணக்கா பண்டார தென்னக்கோன் இன்று பி.பகல் நாரேஹேன்பிட்டியில் உள்ள அரச தகவல் திணைக்களத்தின் தமது காணி அமைச்சின் அபிவிருத்திகள் பற்றி ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்தினார்.
இந்த ஆண்டு மஹிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் காணியில்லாத மக்களுக்கு 2 இலட்சம் காணித்துண்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அடுத்த வருடமும் 1 இலட்சம் காணித்துண்டுகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன. இதில் அரச உத்தியோகத்தர்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்குச் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் கிளிநொச்சியில் தமிழ் மக்களுக்காக 22 ஆயிரம் காணித்துண்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன, எல்.எல்.ஆர்.சி யின் பரிந்துறைக்கு அமையவே இக் காணிகள் கிளிநொச்சி மக்களுக்கு வழங்கப்பட்டன.
நேற்று ஜனாதிபதியினால் குருநாகலிலும் 12ஆயிரம் காணித்துண்டுகள் வழங்கப்பட்டன. நாளை ஹம்பாந்தோட்டையில் 5ஆயிரம் காணித்துண்டுகள் வழங்கப் படஉள்ளன.
இதனை விட அரச காணியொன்றில் வாழ்ந்து வந்தால் அல்லது காணிதுண்டொன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு ரண்பிம உறுதித் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை கணனிமயப்படுத்தியுள்ளோம்.
தற்போது நிலசக்தித் திட்டத்தின் கீழ் காணி உறுதிக்குப் பதிலாக புதிய உரித்துச் சான்றிதழொன்று நாடுபூராவும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஊடகவியலாளர் தினக்குரல் நிலாம் - அமைச்சரிடம் - கேள்வி தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக காணிப்பிரச்சினை இருந்து வருகின்றது. அது பற்றிய தங்களது கருத்து என்ண ?
அமைச்சின் செயலாளர் பதில் - அண்மையில் நாங்கள் பொத்துவில் காணி சம்பந்தமாக அங்கு சென்று அப்பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினோம். அங்கு 400பேரது காணிப் பிரச்சினைகள் உள்ளது. யுத்தம் நடைபெற்ற 30 வருட காலத்திற்கு முன் அங்கு பலவந்தமாக அப்பிரதேச மக்கள் அரச காணியை பிடித்துள்ளார்கள். பிரதேச செயலாளரது பொய் கையொப்பமிட்டு காணிகளை எடுத்துள்ளார்கள். இதில் உண்மையாக 100 பேர் காணி பத்திரம் வைத்துள்ளனர். ஏனைய 300 பேருக்கும் பிழையான முறையில் காணியைப் பெற்றுள்ளனர். 300 பேருக்கு எதிராக காணி அமைச்சினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளன.
செயலாளர் அவர்களே 2 இலட்சம் காணிகளை இலவசமாக பகிர்ந்தளித்துள்ளீர்கள.; ஆனால் பரம்பரை பரம்பரையாக உறுதிப்பத்தரம்; வைத்துள்ள முஸ்லீம்களது 300 பேரது காணிக்காக தங்களது அமைச்சினால் நீதிமன்றத்தில் வழக்கு போடுகின்றீர்கள்.
அஸ்ரப் ஏ சமத் - ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதேச ஊடகவியலாளர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஏதாவது காணிகள் வழங்குவீர்கள்
அமைச்சர் நிச்சயம் உங்களது ஊடக சங்கங்கள் அமைப்புக்கள் ஊடாக எனக்கு எழுதுங்கள் அந்தந்த மாவட்டத்தில் காணிகள் வழங்கும்போது ஊடகவியலாளர்களுக்கும் காணி வழங்குவேன். அவருடைய பெயரில் காணிப்பதிவு இருக்காதவராக இருத்தல் வேண்டும். ஆனல் நகரங்களில் காணிகள் இல்லை. கிராமங்களிலேயே அவர் வாழவேண்டும்.
அஸ்ரப் ஏ சமத் - அமைச்சரே நீங்கள் தம்புள்ளையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள். தம்புள்ளைப் பள்ளிவாசலின் நிலைமை என்ன?
அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் தம்புல்லையில் உயிருடன் இருக்கும் வரை அந்தப் பள்ளிவாசலை அகற்ற உடமாட்டேன் என அமைச்சர் . பதிலளித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment