எனக்கு தற்போதைய ஜனாதிபதி பல கொடுமை செய்துள்ளார். அதனையெல்லாம் சொல்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகக் கருதுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீண்டும் எனது அரசியல் இல்லத்திற்கு வருவதற்கு எக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைதுள்ளது. நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நீண்ட நாட்களாக கடமையாற்றி வந்துள்ளளேன்.
கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அரசியலுக்கு வந்ததை எண்ணி சந்தோஷமடைகின்றேன்.
நான் இவ்வளவு காலம் நிறைய விடயங்களை பொறுத்திருந்து சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தேன். அதனையெல்லாம் சொல்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்பம் எனக் கருதுகிறேன். எனக்கு தற்போதைய ஜனாதிபதி பல கொடுமை செய்துள்ளார்.
நான் எனது வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று எழுதி வருகின்றேன். அதன் மூலம் உங்களுக்கு அதனை விரைவில் அறிய முடியும்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றிகொள்வோம். எமது ஆட்சியன் போது இந்த நாட்டின் சிறு பான்மையினத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி ஆட்சி நடத்துவதோடு ,நிறைவேற்று அதிகாரத்தினையும் இல்லாதொழிப்போம்.
மைத்திரிபால சிறிசேன மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவர். அவரின் தந்தை ஒரு விவசாயி என்பதால் அனைவரின் கஷ்டங்களையும் நன்கு அறிந்து செயலாற்றக் கூடியவர்.தற்போது உள்ள காவற்றுறையினருக்கு அவர்களின் கடமையை முறையாக செய்ய முடியாத நிலையுள்ளது. நேர்மையாக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் தண்டனை பெற வேண்டியுள்ளது. அதனால் அதிகாரிகள் தங்களின் கடமையை செய்ய தவறுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி :வீரகேசரி
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment