ஆளும் கட்சியின் மற்றொரு எம்.பி ஐ,தே.க.இணைவு!

ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அக்கட்சியில் இவர் இணைந்துள்ளார்.
இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.

எனினும் பின்னர் இவர் பிரதி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இந்த நிலையில் அக்கட்சியிலிருந்து பிரிந்த அவர், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :