புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 6வது வருடாந்த விளையாட்டு விழா!

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 6வது வருடாந்த விளையாட்டு விழா 31-10-2014 நேற்று வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எல்.ஏ.முஹைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பல்வேறு பாலர் விளையாட்டுக்களில் பங்குபற்றிய பாலர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விருதும்,சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் உட்பட ஊர் பிரமுகர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் அஞ்சலோட்டம்,பழம் தெரிதல்,புதையல் யாருக்கு? ,நிறப் பொருட்கள் எடுத்தல்,பலூன் உடைத்தல்,தடை தாண்டல்,பாய் சுற்றுதல் போன்ற பல்வேறு பாலர் விளையாட்டுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :