பதுறியா ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலையின் 23வது வருடாந்த விளையாட்டு போட்டி-படங்கள்

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில்; காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் பதுறியா ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலையின் 23வது வருடாந்த விளையாட்டு போட்டி 31-10-2014 வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பதுறியா விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எச்.எம்.அக்ரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பாலர் விளையாட்டுக்களில் பங்குபற்றிய பாலர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.அலி சப்ரி,எம்.எஸ்.எம்.சியாத்,எம்.எம்.எம்.ஜனூப் ,காத்தான்குடி மின்சார சபையின் பொறியியலாளர் எம்.ஏ.சீ.எம்.நௌபல் உட்பட ஊர் பிரமுகர்கள், பதுறியா விளையாட்டு கழகத்தின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு பாலர் விளையாட்டுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :