உலக அஞ்சல் தினத்தையொட்டி 2014ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண அஞ்சல் தின வைபவங்கள் இம்மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவகானந்தலிங்கம் தெரிவித்தார்.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பீ.ஆர். அபயரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.
உலக அஞ்சல் தினத்தையொட்டி அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண தபால், உபதபால் அதிபர்களும் மற்றும் ஊழியர்களும் கௌரவிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவகானந்தலிங்கம் மேலும் கூறினார்.
.jpg)
0 comments :
Post a Comment