மன்னார் பெரியமடு கிராமம் தோன்றிய வரலாறும்---விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட வரலாறும்

பெரியமடு முஸ்லிம்களின் வரலாறு

மன்னார் மாவட்டத்தில் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பெரியமடு குடியேற்றத்திட்டம் அமைந்துள்ளது. இக்குடியிருப்பு விடத்தல் தீவிலிருந்து தென்கிழக்காக 8 மைல் தூரத்திலும் பாலம்பிட்டியிலிருந்து வடமேற்காக 7 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இக்குடியேற்றத் திட்டத்தின் மொத்தப்பரப்பளவு 850 ஏக்கராகும். இதன் மொத்த சனத்தொகை 1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பின்படி 1127 பேர் ஆகும். இக்குடியேற்ற திட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் (87மூ) இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சிறுபான்னையினராகவும் காணப்பட்டனர். 1990 தரவுகளின் படி காணப்பட்ட 610 குடும்பங்களில் 600 குடும்பங்கள் முஸ்லிம் குடும்பங்களாக காணப்பட்டன.

பெரியமடு கிராமத்தின் தோற்றம்

விடத்தல் தீவு மன்னார் மாவட்டத்தில் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள ஒரு தீபகற்ப அமைப்பைக் கொண்ட கிராமமாகும். பெருகிவரும் மக்கள் தொகைக்கு இக்கிராமத்தின் இருப்பிட நிலவசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டனவாகக் காணப்பட்டன.

இந்நிலையில் 1956ம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடத்தல் தீவுக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதம அமைச்சர் திரு. டி.எஸ். சேனநாயக்க அவர்களிடம் விடத்தல் தீவு பொதுமக்கள் பெரியமடுவில் ஒரு குடியேற்றத்திட்டத்தை அமைத்துத்தரும்படி மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர். இவ்வேண்டுகளுக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் அவர்கள் ஒரு குடியேற்றத்திட்டத்தை ஆரம்பிக்கும்படி விவசாய அமைச்சருக்கு அறிவித்தார். அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த திரு.டட்லி சேனநாயக்க திட்டம் ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதன் பிரதிபலனே பெரியமடுக் குடியேற்றத்திட்டாகும். பெரியமடுக் குடியேற்றத்திட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

பெரியமடுக்குளம்

பெரிய மடுக்கிராமத்தின் பொருளாதார வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவனவாக இக்குளமே காணப்படுகின்றது. குடியேற்றத்திட்டத்தின் கிழக்குப்புறமாக அமைந்துள்ள 750 சதுர ஏக்கர் பரப்பளவைக் கொண்டவையாக பெரியமடுக் குளம் காணப்படுகின்றது. இக்குளத்தின் மொத்த கொள்ளளவு 4478 ஏக்கராகும். மறு வார்த்தையில் கூறுவதாயின் இக்குளம் 20 அடி ஆழ நீரைக் கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது. குளத்தில் மீன்பிடி நடை பெறுவதோடு பெரும்பான்மையாக குள நீரை நம்பியே விவசாயம் செய்யப்படுகின்றது. இதில் நெற்பயிர்ச்செய்;கைää உபஉணவுப்பயிர்ச்செய்கைää பழப்பயிச்செய்கை என்பன செய்யப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பெரும்பான்மையாக குளத்திலேயே தங்கியுள்ளது.

(1956-1967)

பெரியமடு குடியேற்ற திட்டத்தில் மக்கள் குடியேறிய 1956ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரையான காலப்பகுதி பெரியமடு வரலாற்றின் முதாலம் தசாப்தமாகும். வரலாற்றின் முக்கிய கால கட்டமாக விளங்குகின்றது. 1953ம் ஆண்டைத் தொடர்ந்து பெரியமடு குடியேற்ற திட்டத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது 1956ம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயாகும். எனவே நாமும் எமது வரலாற்றின் தோற்றுவாயாக கொள்வது இக்காலப்பகுதியேயாகும்.

எமது வரலாற்றிலே இவ்வாரம்ப தசாப்தம் மிக முக்கியமானதாகும். ஏனெனில் பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அனர்த்தங்களுக்கும் மத்தியில் மக்கள் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டது இத்தசாப்தத்திலேயாகும். 

சாதாரண இயல்பு வாழ்க்கை வாழ்ந்த மக்கள் புதியதொரு வாழ்க்கைக்கு தம்மை தயார் படத்தவேண்டிய கட்டாயம் இங்கு காணப்பட்டது. சாதாரண இயல்பு வாழ்க்கையில் ஓரளவு வசதிகளை அனுபவித்து வாழ்ந்வர்களாக இவர்கள் பெரியமடுவிலே குடியேறிய போது “கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல” எனும் தொடருக்கும் பொருத்தமானதாக இருந்தது. 

அதாவது குடியேறிய ஆரம்ப காலம் மழைக்காலமாக இருந்தமையும் எவ்வித போக்கவரத்து வசதிகளும் இன்றிய நிலை காணப்பட்டமையும் இதற்கு முக்கய காரணமாகும். சாதாரண ஒரு தேவையை நிறைவு செய்வதாக இருப்பினும் கூட 8 மைல் தூரத்தில் உள்ள விடத்தல் தீவிற்கு அதுவும் கால் நடையாக சென்று வர வேண்டிய கட்டாயம் காணப்பட்டது. போக்குவரத்துத் துறையிலே பெரியமடு மக்கள் அனுபவித்த சிரமங்கள் துன்பங்கள் எழுத்திலே வடிக்க முடியாத அளவுக்கு அமைந்திருந்தன.

ஆயினும் அத்துன்ப துயரங்களை எதிர் கொண்டு அவற்றிற்கு எதிர் நீச்சலிட்டு தம்மை நிலை நிறுத்தியமை இம்மக்களின் தளரா உறுதிக்கு ஒரு சான்றாகும். 1956ம் ஆண்டு இறுதிக் காற்கூற்றிலே ஆரம்பித்த இப்பயணம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர் கொண்ட போதும் தொடர்ந்து இடம் பெற்ற ஒன்றாகும். மக்கள் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக குடியேறிய ஆரம்ப காலகட்டத்திலே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

1957ம் ஆண்டிலே இரண்டாவது தொகுதி குடியிருப்பாளர்கள் பெரியமடுவின் குடியேற்றத்திட்ட பகுதியிலே குடியமர்த்தப்பட்டனர். இதனால் பெரியமடுவின் குடித்தொகை அதிகரித்ததோடு தேவைகளும் அதிகரித்தன. மக்களின் செயற்பாடுகளும் பல்துறை சார்ந்து விருத்தி அடைந்தன. இந்த வகையிலே குடியேறியவர்களால் 1957ம் ஆண்டிலே கிராம அபிவிருத்திச் சங்கம் உருவாக்கப்பட்டது. பெரியமடுவின் கிராம அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் இக்கிராம அபிவிருத்தி சங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

ஆரம்ப ஆண்டான 1956, 1957ம் ஆண்டு காலப்பகுதி ஒரு கஸ்ட சீவனத்துக்குரிய காலப்பகுதியாகவே காணப்பட்டது.இங்கு மிகுந்த கஸ்டங்களும்இசிரமங்களும் எதிர்நோக்கப்பட்டது. போக்குவரத்துத் துறையிலேயாகும்.பெரயமடுவில் குடியேறியவர்களின் தாய்க்கிராமமான விடத்தல்தீவுக்கும் பெரியமடுவுக்கும் இடையில் சீரான முறையில் போக்குவரத்தை மேற்கொள்ளக் கூடியபாதை வசதியோ வாகன வசதியோ காணப்படவில்லை. கால் நடையாகவும் சிலவேளைகளில் மாட்டு வண்டிகளிலும் பிரயாணம் மேற்கொள்ளப்பட்டது. 

மழைகாலங்களிலும் எவ்வித போக்கு வரத்தும் செய்யமுடியாத நிலையும் காணப்பட்டது. நாம் முன்னர் தொட்டுப் காட்டிய பிரகாரம் மக்களின் தேவைக்குரிய பொருட்கள் ஐக்கிய நாணய சங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு கூட்டுறுவகு; கடைமூலம் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இவ்வாறு பொருட்கள் எடுத்து வரப்பட்ட போதும் பல்வேறு சிரமங்கள் எதிர் கொள்ளப்பட்டன. மன்னாரிலிருந்து லொறிகள் மூலம் பொருட்கள் மடுவீதி மடுக்கோவிலூடாகப் பெரியமடுவுக்கு எடுத்து வரப்படும். மழைக்காலங்களில் லொறி பாலம்பிட்டியில் நிறுத்தப்பட்டு மாட்டு குளத்திற்கருகாமையிலும் முதலாம் வாய்க்காலிலும் உள்ள ஒடுங்கிய மதகுகள் ஊடாக மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே வரவேண்டியிருந்தது. 

இவ்வாறு வரும்போத பலமுறை திருப்பமுடியாத நிலையில் பள்ளத்தில் விழுந்த சம்பவங்களும் நீர்ப்பாசணக் கால்வாயில் விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பிரயாண கஸ்டத்தின் மற்றொரு பரிமாணம் நோயளர்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் போது அனுவித்தாகும். அவசரமாக நோயாளர்களைக் கொண்டு செல்லக்கூடிய வழிவகை இல்லாத நிலையை இன்று கற்பனை செய்கின்ற போது மக்கள் அடைந்த துன்பத்தின் எல்லையை உணரலாம். இவ்வாறு மட்டுமன்றி 1957ம் ஆண்டில் இறுதிப்பகுதி இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

1957 டிசெம்பரில் இலங்கை முழுவதிலும் ஏற்பட்ட பெருமழையும்ää வெள்ளப்பெருக்கும் பெரியமடுவையும் தாக்கியது. பெரும் மழைகாரணமாக குளம் நிரம்பி வழியத்தொடங்கிய போது குளக்கட்டின் சில இடங்களில் மண் கரைந்து உடைப்பெடுக்கக்கூடிய அபாயத்தைக்கண்ட ஊரவர்கள் நீர்ப்பாசண திணைக்கணத்தின் உதவியுடன் சாக்ககளில் மண்ணை நிரப்பி மண் கரைந்து செல்லும் இடங்களை அடைத்து அரண் செய்தனர். ஆயினும்ää தொடர்ந்து பெய்த பெரும்மழைக்கு இவர்கள் செய்த சிறு அரண் தாக்குப்பிடிக்கவில்லை. குளக்கட்டின் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குளத்து நீர் வெளிN யனெ ½ வiஅநளஇ வiஅநள யனெ யறியது. 

இவ்வாறு உடைப் பேற்பட்டமைக்கு மற்றொரு காரணமும் கூறலாம்.புதிதாக புணர் நிர்மானம் செய்யப்பட்டு குளக்கட்டு அமைக்கப்பட்டிருந்தமையால் மண் சரியான முறையில் இறுகி இருக்கவில்லை. தொடர்ந்;து மழை பெய்து குளம் நிறைந்தமை உடைபேற்பட காரணமானது. 1957 டிசெம்பம் 25ம் திகதி பெரியமடுக் குளக்கட்டு உடைந்தது.

குளம் உடைத்து ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட வில்லையாயினும் ஆரம்ப கால வாழ்க்கைக்குப் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியது. 1ம் 2ம் 3ம் இலக்க வீடுகளில் மட்டும் வெள்ள நீர் உட்புகுந்தது. ஆனால் நீர்ப்பாசன வலையமைப்மை இது மோசமாக பாதித்தது. 1ம் வாய்க்காலில் அமைந்த செப்பனிடப்பட்ட 60 ஏக்கர் வயற்பரப்பு வெள்ளத்தால் அள்ளி வரப்பட்ட மண் நிரம்பி நெற்செய்கைக்கு பொருத்தமற்றதாக மாறியது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த நீர்பாசண கால்வாய்த்தொகுதி பூரணமாக பாதிக்கப்பட்டது. பெரியமடுவில் குடியேறிய முதல் வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை நீர்பாசண சீரின்மை காரணமாக எதிர்பார்த்த பலனை கொடுக்காத நிலையிலே இரண்டாவது வருடச் செய்கையை ஆவலோடு நோக்கியிருந்த மக்களுக்கு இது ஒரு பேரிடியாக இருந்தது. 

இதனால் பெரியமடுவில் குடியேறிய மக்களில் 15மூ பெரியமடுவை விட்டுச் சென்று விடத்தல் தீவுக்கும்ää ஏனைய தமது சொந்த கிராமங்களுக்கும் தமிழர்கள் சென்ற விட்டனர். மிகுதி மக்கள் இறைவன் மேல் பாரத்தைச் சுமத்தியவர்ளாக துன்பங்களை தாங்கி பொறுமை காத்து பெரியமடுவிலேயே நிலைத்து விட்டனர்.

இவர்கள் உடனடியாகவே செயலில் இறங்கினர். கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் குழுவொன்று மன்னார் சென்றது. 1956 பொதுத் தேர்தலில் மன்னார்த் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்;ட ர்.ளு. முகமட் அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கியது.

 பிரதமரையும் ளு.று.சு.னு. பண்டார நாயக்க அவர்களையும் நீர்ப்பான அமைச்சர் ஊ.P.னு சில்வா அவர்களையம் சந்தித்து நிலைமையை விளக்கியதன் பயனாக அணைக்கட்டின் திருத்த வேலைகளும் நீர்ப்பாசன கால்வாய்களின் வே மில ளைகளும் துரித கதியில் நடைபெற்றன. இருவருடங்களில் புனரமைப்பு வேலைகள் பூர்த்தியாகின. எனினும் 1960 1961 காலபோகத்தில் மீண்டும் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. குளக்கட்டு உடைப்பின் மூலம் காணிகளை இழந்தவருக்கு மாற்றுக் காணிகள் 6ம்ää 7ம் வாய்க்கால்களிலும் பச்சைக் காட்டிலும் வழங்கப்பட்டன. பெரியமடுவின் வரலாற்றில் ஆரம்ப கட்டத்திலேயே ஏற்பட்ட இந்நிகழ்வு இன்றும் கூட முதியவர்களால் நினைவு கூறப்படும் ஒன்றாகும்.

1964ம் ஆண்டு பெரியமடு வரலாறு மீண்டுமொரு இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்ட வருடமாகுமு;. 1964 டிசம்பர் 25ம் திகதி இலங்கையை தாக்கிய புயலின் கோரத் தாண்டவம் பெரியமடுவையும் நிலைகுலையச் செய்தது. பேரிய மடு வீடுகளுக்கு பொருத்தப்பட்ட கூரைகளில் பெரும்பாலானவை சூரைக் காற்றால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டனர். வீட்டு வளவுகளிலுமää குழந்தைகள்ää தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டனர். 

வீட்டு வளவுகளிலும் வீதியோரங்களிலும் காணப்பட்ட பெருமரங்கள் முறிந்தும் சரிந்தும் பெரும் பாலான வீடுகள் கூரையற்று வானம் பார்த்தன. புயலால் அள்ளுண்டு சென்ற தகரங்கைள அரைகுறையாகச் சேகரித்து வெயிலுக்கு வரம்பிட்டு வீடுகளை கோட்டைகளிலிருந்து கொடைவள்ளல் நளீம் ஹாஜியார் அவர்களால் நிவாரணப் பொருட்கள் அனுப்;பி வைக்கப்பட்டு மக்களுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டன. 

இப்புயலை தொடர்ந்து ஊரிலே வாந்திபேதி ஏற்பட்டு பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்நோய் பெருமளவு சிறுவர்களையே பாதித்தது. இக்காலத்தில் பெரியமடு வைத்தியசாலையில் கடமையாற்றிய உதவி வைத்தியர் திரு. செல்வநாயகம் அவர்கள் செய்த சேவையை இம்மக்கள் இன்றும் மறக்காது நினைவு கூருகின்றனர். மேலும் பாடசாலைக் கட்டிடமும் கூரை அகன்று விழுந்து நொருங்கியது.

இவ்வனர்த்த விடயமும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டால் அரசு வீடுகளின் தகரக் கூரைகளை அகற்றி அவற்றை ஓட்டுக்கூரைகளாக மாற்றியமைத்துக் கொடுத்தது. வீடுகளின் முகடுகள் உயர்த்தப்பட்டு கூரைகள் மாற்றப்பட்டன. காணி அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைகள் 1966ம் ஆண்டில் நிறைவு பெற்றன.

(1968-1978)

இந்தத் தசாப்தத்தின் முதல் ஆண்டில் மத்தியபள்ளி நிரந்தரக் கட்டிடமாக அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் சபாநாயகருமான அல்ஹாஜ் எம். எச். முகம்மது அவர்கள் பெரியமடுவுக்கு விஜயம் செய்தது இதுவே முதலாவதாகும். இவரினாலேயே மத்திய பள்ளிக்கு அடிக்கல் நாட்டிவைக்கபட்டது. 

உள்ளுர் வெளியூர் தனவந்தர்களின் நிதி உதவியுடன் விசேடமாக நளீம் ஹாஜியாரின் நிதியுதவியின் மூலம் இப்பள்ளி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கட்டிட வேலைகள் முடிவடைந்து 1968ம் ஆண்டில் மார்க்க கடமைகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளி 1966.06.01ம் திகதி வக்பு சபையில் சுஷ1062ஷஆN46 எனும் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 1968ம் ஆண்டில் தூரம் காரணமாக ஐக்கிய நாணய சங்கத்தின் கூட்டுறவுக்கடை பெரியமடுக் கிழக்குப் பகுதியில் பள்ளிக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

1969ம் ஆண்டு பெரியமடுவின் போக்குவரத்துத் துறையில் முக்கிய ஆண்டாகும். இவ்வருடத்தில் தான் ஈச்சளவக்கை ஊடாக ஐந்தாம் வாய்க்காலையும் வேட்படி விலக்கையும் இணைத்து புதிய வீதி சிரமதானம் மூலமாக அமைக்கப்பட்டது. பெரியமடு மக்கள் எதிர் நோக்கிய பிரயாணக் கஸ்டங்களுக்கு முடிவு காணும் முகமாக பெரியமடு ம.வி யின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஆ.டு.ஆ. சரிப் அவர்களின் தலைமையில் ஊரவர்கள்ää இளைஞர்கள்ää மாணவர்கள்ää ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து ஒரு வாரகாலம் மேற்கொண்ட சிரமதானம் மூலம் 3 கிலோமீற்றர் நீளமான இப்பாதை அமைக்கப்பட்டது. ஈச்சளவக்கை ஆற்றில் வைக்கப்பட்ட பெரிய நீர்க்குழாய்கள் கரடிப்பூவலுக்கு அப்பாலிருந்து எடுத்து வரப்பட்டன. பெரியமடுவின் போக்குவரத்து நடவடிக்கைகளின் திருப்புமுனையாக இவ்வீதியமைப்பு அமைந்திருந்தது.

1970ம் ஆண்டு இலங்கை அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்த ஆண்டு இவ்வாண்டில் இடதுசாரிகளின் உதவியுடன் சிறிமா அம்மையார் ஆட்சியை அமைத்து இலங்கையின் பொருhளாதரத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். பெரும்பாலான இறக்குமதிகள் நிறுத்தப்பட்டு உள்ளுர் உற்பத்திகள் இலங்கையின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின. ஆனால் பெரியமடுவில் பொருளாதாரத் துறையில் மலர்ச்சியும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. பாரம்பரிய நெற்செய்கையிலேயே தங்கியிருந்த பெரியமடுவின் பொருளாதாரம் மிளகாய்ச் செடிகாய்ச் செய்கையை நோக்கி இப்பிரிவில் அடியெடுத்து வைத்தது 1970ம் ஆண்டின் பின் ஆரம்பமான மிளகாய்;ச் செய்கை பெரியமடுவின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக அதன் பின் வந்த காலப்பகுதி முழுவதும் விளங்கியது. 

1970ம் ஆண்டில் பெரியமடுப் பாடசாலை மண்ஃபெரியமடு மகாவித்தியாலயம் தரம் உயர்தப்பட்ட நிகழ்வும் இங்கு ஜனாப் யு.ஊ. ஹக் அவர்கள் அதிபராக கடமையாற்றியமையுமே அவர் பின்னாளில் மன்னாரின் ஒரே முஸ்லிம் உயர் கல்வியதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.
ஒவ்வொரு தசாப்த காலத்துக்குள்ளும் ஏதோவொரு இயற்கை அனர்த்தம் ஏற்பட்டே வந்துள்ளதென்பது எம்மவரின் அனுபவ வரிகளுக்கு ஒப்ப எமது வரலாற்றின் இரண்டாவது தசாப்த காலத்திலே மிக் நீண்டவொரு இயற்கை அனர்த்தத்திற்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.

1974ம் ஆண்டிலே ஆரம்பித்த வரட்சி இருவருடங்களைக் கடந்து 1976ம் ஆண்டு காலம் வரையில் நீடித்தது. இவ்வரட்சிக் காலப்பகுதியானது பெரியமடுவில் மிளகாய்ச்செய்கை பரந்தளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியாகும். எனவே இக்காலப்பகுதியில் நீர்தேவையை சமாளிப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர். நீர்வசதியைச் கொண்ட ஆற்றுப் பகுதிகளை துப்பரவு செய்து மிளகாய்த் தோட்டங்களை அமைத்தனர். உள் குளப்பகுதியில் கர்ராஞ்சிவெளிää வில்லூன்றி போன்றவிடங்ளிலும் குளத்திற்குக் கீழே ஐஸ்வாடியிலும் மிளகாய்ச் செய்கை பண்ணப்பட்டது. அரச நமானியத்தை கொண்டு விவசாயிக் கிணறுகள் பலவும் அமைக்கப்பட்டன. இதே காலப்பகுதியில் பெரியமடுப் பிரதேசத்தில் தரைக்கீழ் நீர்வள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இக்காலப்பரப்பு மக்களைப் பொறுத்தவரையில் உணவுப் பொருட்கள் மிக தட்டுப்பாடாக இருந்த காலப்பகுதியாகும் வரட்சி காணமாக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது ஒரு புறமிருக்க உள்நாட்டு உற்பத்திகளைக் பெருக்கும் நோக்கோடு இறக்குமதிகள் நிறுத்தப்பட்டமையாலும் இந்திலை ஏற்பட்டது. பாணுக்கான நீண்ட வரிசையும் காட்டில் அல்லைக் கிழங்கு தேடுவதும் நாளாந்தம் காணக்கூடியதாக இருந்த நிகழ்வுகளாகும். 1974ம் ஆண்டில் பெரியமடு முதலாவது கிராம விஸ்தரிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இளைஞர்கள் 50 பேருக்கு ஈச்சளவக்கையில் ஒரு ஏக்கம் வீதம் காணிகள் வழங்கப்பட்டன. ஆனால் இரு வருடங்களுக்கு மேல் தொடர்ந்த வரட்சி காரணமாக இவ்விஸ்தரிப்பு நடவடிக்கை எந்தப்பலனையும் கொடுக்கவில்லை.

1975ம் ஆண்டில் அப்போதைய அரசங்கத்தில் போக்குவரத்து அமைச்சராகவிருந்த திரு மு.P. ரத்நாயக்க பெரியமடுவுக்கு விஜயம் செய்தார். பெரியமடு மக்கள் தமது போக்குவரத்து கஸ்டங்கை விலாவாரியாக எடுத்துரைத்ததன் விளைவாகவும் நேரடியாக அதனை அறிந்து கொண்டதன் விளைவாகவும் பெரியமடு பேரூந்து சேவையொன்ஐ மன்னாரிலிந்து ஆரம்பிப்பதற்க உறுதி வழங்கினார். கொழுப்பு திரும்பியதும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் கொழும்பிலிருந்து புதிய பேரூந்து ஒன்றை பெரியமடுவுக்கு என்றே மன்னார் சாi லக்கு அனுப்பி வைத்தார். 

அனுப்பப்பட்ட பேரூந்து பல மாத காலம் மன்னார் கச்சேரி வளவினுள் அப்படியே நிறுத்தப்பட்டு இருந்தது. பெரியமடு மக்கள் பல்வேறு தரத்திலும் முயற்சிகளை மேற்கொண்டும் மன்னாரிலிருந்து அப்போரூந்து சேவை ஆரம்பிக்கப்படவே இல்லை. அதிகாரிகள் அசிரத்தைää பராமுகம் என்பவற்றோடு பெரியமடு தனிப்பெரும் முஸ்லிம் கிராமம் என்பதும் காரணங்களாகும். இதே வேளை பெரியமடுவை விட மோசமான பாதைகளைக் கொண்டிருந்த சிறிய கிராமங்களான பாலம்பிட்டிää பரப்புக்கடந்தான்ää குஞ்சுக்குளம் போன்றவற்றிற்கு பேரூந்துச் சேவைகள் நடாத்தப்பட்டன. இப்பெரியமவின் இரண்டாவது தசாப்தம் வரட்சியோடும் புறக்கணிப்போடும் நிறைவு பெற்றது.

(1979-1988)

1982ம் ஆண்டிலும் பெரியமடுவுக்கு அரசியரல் பிரமுகர் ஒருவர் விஜயம செய்தார். கிராமிய கைத்தொழில் துறைபிரதியமைச்சராக இருந்த மர்ஹ{ம் பரீத் மீராலெப்பை அவர்களாகும். அமைச்சர் பொறுப்;பு கிடைத்ததும் அன்னாரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது விஜயமாகும். மன்னார் அரசாங்க அதிபரால் இவரது விஜயம் தடுக்கப்பட்ட போதும் அது நடைபெற்றது. பெரியமடுவுக்கு விஜயம் செய்த இறுதி அரசியல் பிரமுகர் இவராவார். ஏனெனில் இதன் பின் இனப்பிரச்சினை கூர்மையடைந்தமையாகும். 

இவரின் விஜயத்தின் போது பெரியமடுவின் நீர்த்தேவை குறித்தும் விரிவா விளக்கப்பட்டதன் விளைவாக 1982ம் ஆண்டில் பெரியமடுக் குளத்திற்கு வடகிழக்காக பாயும் பறங்கியாற்றை பெரியமடுக் குளத்;;திற்கு திசை திருப்பும் உலூசிப்பூவல் அபிவிருத்தி திட்டத்திற்கும் 1983ம் ஆண்டில் பெரியமடுவின் தென் மேற்கே அமைந்திருந்த புற்றடி மோட்டைக்குளத்தை திருத்தி புனரமைப்பது தொடர்பாகவும் சாத்தியக்கூற்று ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பின் பெரியமடு பிரதேசத்தின் நீர்த்தேவை ஓரவுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கும்.

1983ம் அண்டு இன்னுமொரு வகையிலும் பெரியமடுவுக்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் முக்கியமானதாகும்இ அதாவது இவ்வருடத்திலேயே இலங்கையின் இனப்பிரச்சினையானது ஆயுதப்போராட்டமாக மாறியதாகும். 1983ம் ஆண்டு டிசம்பர் ஆரம்பமான பெருமழை தொடர்ந்து 1984ம் ஆண்டு மே வரையில் பெய்ததால் இக்காலப்பகுதியில் தொடாச்சியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பெரியமடு விவசாய நடவடிக்கைகளுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. விளைந்த நெல் மற்றும் தானியங்கள் அறுவடை செய்ய முடியாதிருந்ததுடன் மிளகாய் உற்பத்தியும் பாரியளவுக்கு பாதிக்கப்பட்டது. இவ்வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 50 மில்லியன் ரூபா என கணிக்கப்பட்டது.

அபிவிருத்தியை நோக்கிய பெரியமடுவின் மூன்றாம் தசாப்தமானது உரிய அபிவிருத்தியை அடைந்து கொள்வதில் இனப்பிரச்சினை அதிகரித்தமையானது பெருந்தடையாக அமைந்தது. பெரியமடுவின் அமைவிடமும் இயற்கைச் சூழலும் பெரியமடுவிலும் இதன் சுற்றுப் புரத்திலுமம் பல தமிழ ஆயுதக் குழுக்கள் இயங்குவற்கு வாய்ப்பாக அமைந்தது. 1983ம் ஆண்டினை தொடர்ந்து பல தமிழ் ஆயுதக் குழுக்கள் பெரியமடுவில்தமது தளங்களை கொண்டு இயங்கின. 

அதனால் பெரியமடு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாயினர். மேலும் கப்பம் வரி என்பவற்றினூடாக பொருட்கள் உபகரணங்கள் என்பவற்றினூடாகவும் அச்சுறுத்தப்பட்டு வாகனங்கள்ää பொருட்கள் மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்பட்டன. இவைதவிர எமது முஸ்லிம்களில் பலர் ஆயுதக்குழுக்களினால் கொலை செய்யப்பட்டனர். 

இளம் கன்னிப்பெண் ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி ஒரு ஆயுதக்குழுவில் இணைந்தவரால் கொலை செய்யப்பட்டதுடன் மற்றொரு ஆயுதக்குழுவினரால் காரணமின்றி ஒருவர்(எம். அபூபக்ர்) சுட்டுக் கொi செய்யப்பட்டார். இவ்வாயுதக் குழுவினால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி தமிழ் இளைஞர்கள் பலரும் பெரியமடுவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேற்போந்தவாறு பெரியமடு வரலாற்றின் மூன்றாம் தசாப்த இறுதிப்பகுதியிலிருந்து இலங்கையின் இன்பிரச்சினையில் வலிந்து உள்வாங்கப்பட்டிருந்தது. இனப்பிரச்சினையில் பெரியமடு மக்களும் வலிந் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

(1988-1996)

இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மை பெற்ற காலப்பகுதியில் இத்தசாப்தம் ஆரம்பமாகின்றது. எனவேää இக்காலப்பகுதியானது பெருமளவுக்கு பல்வேறு வகையிலும் பிரச்சினைகளால் சூழப்பட்ட ஒரு காலப்பகுதியாக விளங்கியது. இதனால் இக்காலப்பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் இடம்பபெறாததோடு வடபுல முஸ்லிம்கள் தமது வாழ்வகங்களை விட்டும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

1988ம் ஆண்டில் பெரியமடு காணிவழங்கல் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டதுää பெரியமடு விடத்தில் தீவு வீதியில் ஈச்சளவக்கையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவரையில் பெரியமடுவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காணிவழங்கல் திட்டங்கள் எதுவும் வரட்சிää போர்ச்சூழல் முதலிய காரணங்களர் உரிய பலனை தராத நிலையில் ஈச்சளவக்கை கரிண வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தில் திருமண மான காணியற்றவர்களுக்கும்ää இளைஞர்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டன. தலா ஒரு ஏக்கர் வீதம் 100 பேருக்கு ஈச்சளவக்கையில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. இத்திட்டம் பெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தவென்றாகும். 

மானிய அடிப்படையில் வீடுகள் அமைப்பதற்கான கடன்வசதிகளும் வழங்கப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்ட வேளையிலே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேசம காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்டிருந்த நிகழ்வுகளே இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்தானமையும் அதன் பின் ஏற்பட்ட வடக்கு கிழக்கு மாகண சபை அமைக்கப்பட்டதையும் இந்திய அமைதிப்படைகளின் வரவுமாகும். இந்நிகழ்வுகளும் எமது மக்களின் மீது பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தியவையாகும். இந்திய அமைதிப்படையின் பிரசமன்னம் தமிழ் ஆயுதக் குழுக்களால் எமது மக்கள் அடைந்த துன்பங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. விடத்தல் தீவிலும் பாலம்பிட்டி மடுக்கோவில் ஆகிய இடங்களில் இந்திய அமைதிப்படையின் முகாம்கள் அமைந்திருந்ததமையால் அடிக்கடி பெரியமடுவுக்கு இவர்கள் வந்து போயினர். அதனால் அவர்கள் வயது வேறுபாடுடின்றி இளைஞர்கள்ää முதியோர்கள்ää பிடிக்கப்பட்டு இம்சைப்படுத்தப்பட்டனர். 

கைது செய்து முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மிளகாய் வியாபாரத்துக்கென சென்று வந்த வேளை ஜனாப் எம். ஜெமில் என்பவர் சுடப்பட்டு பாரிய காயத்துக்குள்ளனார். இவ்வேளையில் விடத்தல்தீவு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பாலம்பிட்டி தமிழர்கள் பலமுறை இடம்பெயர்ந் பெரியமடுவில் தஞ்சம் அடைந்த போது எமது மக்கள் அவர்களுக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்து ஆதரித்தனர்.

இந்திய அமைதிப்படை 1989ல் இலங்கையிலிருந்து வெளியேறியபோது எமது மக்களும் சிறது ஆறுதல் அடைந்தனர். ஆயினம் எம்மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தது. 1990ம் ஆண்டில் 20ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியது. போக்குவரத்துக்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டன. மன்னாருக்கு செல்வதாயின் கடல் மார்க்மாகவே செல்லவேண்டியிருந்தது. 

வவுனியாவிற்கும் இலங்கையின் தென்பகுதிக்கும் பல்வேறு பொருட்களுக்கும் தடைவிதிக்கப்பட்டு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் வடபகுதியிலிருந்து பெருமளவு தமிழர்கள் இடம் பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றனர். இவ்வாறு தமிழர்கள் சென்ற போது பெரியமடுவில் வசித்த மலையக தமிழர்களில் பெரும்பாலானோரும் தென்னிந்தியாவுக்குச் சென்றனர். அவ்வாறு சென்ற போது இவர்கள் தமது உடமைகளை விற்றுவிட்டுச் சென்றனர். 

அவ்வுடமைகளை உரிய பெறுமதியைக் கொடுத்து இங்கிருந்த முஸ்லிம்களே வாங்கி இவர்களுக்கு உதவி செய்தனர். வவுனியா கிளிநொச்சிää முல்லைத்தீவு தமிழர்கள் இந்தியா சென்றபோது பெரியமடுவை இடைத்தங்கல் நிலையமாக கொண்டனர். இவ்வாறு இவர்கள் சென்ற பெரியமடு மஹாவித்தியாலயத்திலே பலநாட்கள் வரையில் தங்கிச் சென்றனர். இதே நேரம் மன்னார் தீவிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் முஸ்லிம்களும் இலங்கையின் தென்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்ற போதும் பெரியமடுவையே தங்கிச் செல்லும் யனெ நிலையமாகக் கொண்டனர். ஆயினும்ää இடம் பெயர்வதைப்பற்றி பெரியமடு முஸ்லிம்கள் சிறிதும் சிந்திக்கவில்லை. 

ஆயினும் போரில் ஈடுபடுவதற்கென தமிழீழ விடுதலைப்புலிகள் முஸ்லிம் இளைஞர்களையும் தமது அமைப்பில் வலுக்கட்டாயமாக சேர்க்கின்றனர் என்ற வதந்தி முஸ்லிம்களின் பிரதேசங்களில் பரவியதால் பெரியமடுவிலும் பெற்றோர்கள் தமது ஆண்பிள்ளைகளை இலங்கையின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த வகையில் வெளியேறிய இளைஞர்கள் கிராமிய அபிவிருத்தி நிறுவனம் பொறுப்பேற்று கொட்டரமுல்லை நளீம் ஹாஜியார் புரத்தில் முகாம் ஒன்றை நிறுவி பராமரித்து சுமார் 100 வரையான இளைஞர்கள் இவ்விளைஞர் முகாமில் பராமரிக்கப்பட்டனர்.

இதோ காலப்பகுதயில் அதாவது 1990 ஜுன் மாதம் இறுதி வரையில் மற்றொரு துன்பியல் நிகழ்வும் பெரியமடுவுக்கு ஏற்பட்டது. கிராம அபிவிருத்தி நிறுவனம் பெரியமடுமற்றும் கோவிற்குளம்ää அடம்பன்ää விடத்தல் தீவு ஆகிய இடங்களில் இடம்பெயாந்த யாழ்ப்பான மக்களுக்கு வழங்கிய உலர் உணவுப் பொருட்களை ஏற்றி வந்த லொறியில் சென்ற கிராமிய அபிவிருத்தி நிறுவன உறுப்பினர்களான பெரியமடுவைச் சேர்ந்த ஜனாப்களான ஆ.யு.ஊ.ஆ. நயீம்ää ஏ.ஆ. ஜகுபர் ஆகியோரும் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அனுராதபுர மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜுலை மாதம் முதல் வாரத்தில் கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக அனுராதபுரம் சென்ற ஜனாப் ஆ.யு.ஊ.ஆ. ஜுவைஸ் எனும் இளைஞர் கலாஓயா இராணுவ முகாமில் கைது செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.

இவ்வாறு நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்கள் பெரியமடுவில் நிலைத்த வேளையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளால் 1990 ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வாழ்வகத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். வரலாற்றாசிரியர்களும் அரசியல் ஆய்வாளர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றுத் தவறு என்றும் இன அழிப்புக்கு ஒப்பானது என்றும் வடபுல முஸ்லிம்களை ஆயுது முனையில் வெளியேற்றிய இந்நிகழ்வு குறிப்பிடப்படுகின்றது. 1990.10.23ம் திகதியிலிருந்து 1990.10.30ம் திகதி வரை வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் நடைபெற்றது. இதில் பெரியமடு முஸ்லிம்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து வெறுங்கையோடு உடுத்த உடையோடு 1990.10.26ää27ää28 ஆகிய மூன்று தினங்களி; வெளியேற்றப்பட்டனர்.

எமது மக்களின் வாழ்வில் என்றும் மறக்கு முடியாதää அழிக்க முடியாத வடுவாக நிலைத்த இந்நிகழ்வு பெரியமடு வரலாற்றில் விழுந்த மாபெரும் கறுப்புப் புள்ளியாகும். இந்நிகழ்வின் மூலம் எமது மக்கள் தேங்காயின் துண்டுகளாகஇலங்கையின் நாலாதிசைகளிலும் சிதறுண்டு போயினர். பல்வேறு கஸ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் இவ்வெளியேற்றம் நிகழ்ந்தது. சொல்லிலே வடி க்க முடியாத துன்பியல் நிகழ்வான இவ்வெளியேற்றத்தின் போது இடைவழியிலே சில பிரசவங்கள் கூட எதிர்பாராத முறையில் நிகழ்ந்தன. ஜனாப். ஆ.ஊ. காமித் எனும் இளைஞன் (வாய்பேசமுடியாதவர்) காலமான போது மிகுந்த கஸ்டங்களோடு எடுத்து வரப்பட்டு இக்கிரிகொல்லாவையில் அடக்கம் செய்யப்பட்டார். 

தாங்கொண்ணாத் துன்பங்கைள அனுபவித்தவராக வெளியேளிய இவர்கள் வவுனியாää வந்து அங்கிருந்து இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர்.பெரியமடு மக்களின் பெரும்பான்iயானவர்கள் புத்தளம் மாவட்டத்தி;லும் ஏனையோர் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் முஸ்லிம் பகுதிகளிலும் அடைக்கலமாகி அகதிகளாயினர்.
1990 ஒக்டோபர் இறுதி வாரத்தில் நிகழ்ந்த பலவந்த வெளியேற்றம் எம்மவர்களை மனத்தளவிலும் உடல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்;திய ஒரு நிகழ்வாகும். இக்காலப்பகுதியிருந்து எமது வரலாற்றிலே ஒரு நிலைகளை ஒரே நேரத்திலே காண முடியும். அவற்றுள் ஒன்று பெரியமடுப் பிரதேசத்தின் நிலைää மற்றையது வெளியேறிய பெரியமடு முஸ்லிம்களின் நிலைää நாம் ஏற்கனவே குறிப்பிட்டுக்காட்டிய பிரகாரம் பெரியமடுவில் வசித்த தமழர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த வேளை ஒரு சிவ தமிழ்க் குடும்பங்களே முஸ்லிம்களுடன் வசித்தனர். 

பெரியமடுவின் பெரும்பான்மையினரான (90மூக்கு மேல்) முஸ்லிம்கள் வாழ்வகத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது பெரியமடு ஒரு மயான நிலைக்கே மாறியது எனலாம். சுமார் 10ற்கும் குறைவான தமிழ்க் குடும்பங்களே அப்போது காணப்பட்டன. 600க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட பின் அப்பிரதேசங்களில் பத்துக் குடும்பங்களால் வாழ்வது சாத்தியமா என்று ஆராயும் போது அவர்களும்(தமிழர்களும்) பெரியமடுவைக் கைவிட வேண்டிய நிலையே காணப்பட்டதுää எனவேää பெரியமடு கைவிட வேண்டிய நிலையே காணப்பட்டது. எனவேää கைவிடப்பட்டு காடாகியது.

 2002ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி சமாதான சூழ்நிலை ஏற்பட்டபோது பெரியமடுவை பார்க்கச் சென்ற வேளையிலே இதனை நிதரிசனமாக காணக் கூடியதாக இருந்தது. இடம் பெயர்ந்த சில குடும்பங்கள் மட்டும் ஊர்திரும்பி இருந்தன. பெரும்பாலான வீடுகள் இடித்து அழிக்கப்பட்டிருந்தன. ஊர் முழுவதும் காடு மண்டிக் காணப்பட்டது. வீதிகள் கூட அடையாளம் தெரியாத அளவுக்கு காடாகி காணப்பட்டது.

பெரியமடு முஸ்லிம்களின் நிலையோ நான்காம் தசாப்;தத்தின் இறுதி வரை அகதி முகாம்களில் அல்லலுறுவதாக அமைந்திருந்தது. 1990 ஒக்டோபரில் பெரியமடுவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் இம்மக்கள் பல குழுக்களாக பிரிந்து பல இடங்களுக்கும் பிரிந்து சென்றனர். முன்னர் கூறிய படி புத்தளம் மாவட்டம் நாடிய பொரும்பான்மையோரில் அதிகமானோர் மதுரங்குளி பிரதேச விருதோடையில் அடைக்கலமாயினர். 

இது தவிர புத்தளம் நகர்ää புளிச்சாக்குளம்ää பனையடிச்சோலைää கனமூலைää பூலாச்சேனைää ஏத்தாளைää கரம்பை ஆகிய இடங்களிலும் கொட்டாரமுல்லையிலும் தஞ்சமடைந்தனர். குருநாகல் மாவட்டத்தின் கெகுனுகொல்லää சியம்பலாகஸ்கொட்டுவää பம்பண்ணைää மெல்சிரிபுர(மாய்வெல) ஆகியவிடங்களிலும் அனுராதபுர மாவட்டத்தில் பமுணுகமைää கலாவௌ(அழகப்பெருகம) மாத்தளை மாவட்டத்தில் நிக்க வட்டுவன ஆகிய இடங்களிலும் பெரியமடு மக்களின் அகதி முகாம்கள் அமைந்திருந்தன. பமுணுகம சென்ற மக்களில் ஒரு தொகையினர் தஞ்சமடைந்த ஓரிரு வாரங்களில் விருதோடை வந்து சேர்ந்தனர். 

விருதோடையில் தஞ்சமடைந்தவர்களில் அதிகமானோர் பெரியமடுவையும் அயற்கிராமமான விடத்தல் தீவையும் சேர்ந்தவர்களாவர்.
1990 ஒக்டோபர் அகதி வாழ்வு எனும் அவல வாழ்வு பெரியமடுவின் நான்காம் தசாப்தத்தின் இறுதி அரைப்பகுதியின் பொதுப்பண்பாக காணப்பட்டது. 

அகதிமுகம்ää பொதுக்கிணறுää பொதுமலசலகூடம்ää ஊற்றுக் கிணறு மாலைநேர பாடசாலை எனப் பல புதியதொரு வாழ்க்கைக்கு இம்மக்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. 1991ம் ஆண்டின் பின்னர் படிப்படியாக பெரியமடு மக்களின் அசைவு விருதோடையை நோக்கி ஆரம்பித்தது. 

இதனால் பெரியமடு என்றால் விருதோடை என்று கூறும் அளவுக்கு பெரியமடு மக்கள் விருதோடையை நோக்கி இடம் மாறுவேராக காணப்பட்டனர்.கொட்டரமுல்ல பம்மண்ணைää மெல்சிரிபுர கலாவௌ சியாம்பெலகஸ்கொட்டுவ புளிச்சாக்குளம் என இம்மக்கள் தஞ்சமடைந்த இடங்களிலிருந்து விருதோடைக்கே வந்து சேர்வோராக இருந்தனர். இதனால் வாளை விருதோடையிலும் பல்வேறு புதிய பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. 1994ம் ஆண்டின் இறுதியில் பெரியமடு மக்களில் 80மூ ற்கு மேலானோர் விருதோடையில் காணப்பட்டனர்.

மெல்லமெல்லத் தொடங்கிய அகதி வாழ்வு வாரங்களாய்மாதங்களாய்வருடங்களாய் நீழ்வதைக் கண்ட மக்கள் அகதிவாழ்;;வில் ஒரு மாறுதலை ஏற்படுத்த முன்வந்தனர்.

இதன் படியாக 1991ல் கிராம அபிவிருத்தி நிறுவனம் பெருக்குவட்டானின் காணியொன்றை குத்தகைக்கு எடுத்து அதில் பெரியமடு மக்களை தற்காலிகமாக குடியேறுவதற்கு முயற்சி மேற்கொண்டது. கரிண எடுக்கப்பட்டு நில அளவீடும் மேற்கொள்ளப்பட்டன. 

ஆனால் ஓரிரு குடும்பங்கள் தவிர வேறு எவரும் குடியேறாத நிலையில் அத்திட்டம் கைவிடப்படவேண்டியதாயிற்று. இதைத்தொடர்ந்து 1992ல் விருதோடையில் வசித்த பெரியமடு மக்களால் பெரியமடு இடம் பெயர்ந்தோர் அமைப்பு என்பதை நிறுவி அதன் மூலமாகவும் பெரியமடு மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து குடியமர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு முயற்சி கைவிடப்பட்டதோடு அமைப்பும் செயழிந்து போனது.1993ல் மீண்டுமொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. 

பெரியமடு நலநோம்பு அமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பும் பெரியமடு மக்களை ஒன்றினைத்து ஒரே இடத்தில் குடியமர்த்துவது தொடர்பாக முனைப்புடன் செயற்பட்டது. அனுராதபுர மாவட்டம் திறப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் கனேவல்பொலவிற்கும்ää பமுணுகமவிற்கும் இடையில் றிரிகலமலைத் தொடருக்கு மேற்காகவுள்ள கந்துபொட எனும் இடத்தில் 100 ஏக்கர் காணியைப் பெற்று அதில் குடியேறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அம்முயற்சியும் கைகூடவில்லை. 

அத்தோடு அவ்வமைப்பும் செயலிழந்து போனது. ஆயினும் பெரியமடு மக்களின் மீள்குடியேற்ற முயற்சி மட்டும் நிறுத்தப்படவில்லை. இதே முறையிலே ஆரம்பித்தன. இந்த வகையில் பெரியமடுவைச்சேர்ந்த சிலரும் பெருக்குவட்டான்ää நுரைச்சோலை ஆகிய இடங்களில் இவ்வாறு குடியேறினர். இந்நிகழ்வுகளில் விருதோடையில் வசித்த பெரியமடு மக்கள் மத்தியில் மீண்டும் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்க வைத்தது. எனவே விருதோடையில் மீண்டும் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. 

இவ்வமைப்பு முன்னைய அமைப்புக்கள் போலல்லாது செயற்பாடு கூடியதாக இயங்கியது.

1994ல் உருவாக்கப்பட்ட அமைப்பு உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கை அரசியலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீள்குடியேற்றத்திற்குச் சாதகமான நிலைமை தோன்றியது. இதனால் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அப்போதைய அரசியல் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த மர்;ஹ{ர் ஆ.ர்.ஆ.அஷ்ரப் அவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைத்ததன் காரணமாக தற்போது பெரியமடு மக்கள் 1995ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் குடியேறினர்.

இவ்வாறு பெரியமடு வரலாற்றின் நான்காம் தசாப்தம்ட அவலங்கள் நிறைந்த அகதி வாழ்வாகி தசாப்த முடிவில் மீள்குடியேற்றமாக மாறியது. இதே நேரம் ஹ{சைனியாபுரத்தில் குடியேறாத பெரியமடுக் குடும்பங்கள் கரம்பை சபாமர்வா இடங்களில் அமைந்த மீள்குடியேற்றங்களிலும் குடியேறினர். எனவே இந்த நான்காம் மீள்குடியேற்றங்களில் நிறைவு கண்டது.

1996-2013

1996ம் ஆண்டில் ஆரம்பமாகிய 5ம் தசாப்தமும் 2006ம் ஆண்டில் ஆரம்பமாகிய 6ம் தசாப்தமும் மீள்குயேற்றகாலமாக தொடர்கின்றன. இம்மீள்குடியேற்றங்களில் வாழ்கின்ற பெரியமடு மக்கள் தாம் மீண்டும் பெரியமடுவில் குடியேறுவதையே தமது ஒரே அவாவாகக் கொண்டுள்ளனர். எனினும் அவ்அவா வாழ் விடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 16 ஆண்டுகளின் பின்னும் கனவாகவே உள்ளது. 

2002ம் ஆண்டில் அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் சமாதானமும் பெரியமடுவுக்கு மீளவும் திரும்புதலும் ஒரு ஒளிக்கீற்றாக தெரிந்தன. 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை நிலவிய போரற்ற சூழலிலே பெரியமடுவைச் சென்று தரிசிக்க கிடைத்ததே தவிர மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்குரிய சூழல் உருவாகவில்லை.

எனினும் எமது பாரம்பரிய பூமியாகிய பெரியமடுவில் போரற்ற சூழலைப்பயன்படுத்தி பெரியமடுவுடன் தொடர்பு படாத தமிழர்கள் பெரியமடு முஸ்லிம்களின் அனுமதியோ அல்லது ஆதரவோ இன்றி குடியேற்றப்பட்டு வருகின்றனர். இக்குடியேற்ற நிகழ்வானது பெரியமடு முஸ்லிம் பெரும்பான்மையை இல்லாதொழிக்குமி; நடவடிக்கையாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக காணப்படுகின்ற போது எந்தவொரு ஆட்சியாளர்களின் காலத்தில் இல்லாதது போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைபுலிகளுடன் சமாதான பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டு சரிவராது 2009ம் ஆண்டு பாரிய யுத்தம் நடைபெற்றது. அதன் விளைவாக இருதரப்பிலும் 100க்கணக்கான உயிர்கள் பலியாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல பொதுமக்கள் பலியகினர்.

பிரபாகரனின் மறைவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளும் மறைந்துள்ளன. இந்நிலையில் இடம் பெயர்ந்த நிலையில் உள்ள மக்கள் 20 வருடகங்களின் பின் தங்கள் சொந்த ஊர் கிடைக்கப் பெற்றதில் பேரானந்தம் அடைந்துள்ளனர்.

இந்நிலயில் புத்தளம்ää குருநாகல்ää அநுராதபுரம் போன்ற பல பிரதேசங்களில் வாழ்வோர் தங்களது சொந்த இடங்களை நோக்கி செல்லதைக் காணலாம். அங்கு சில குடும்பங்கள் தற்காலிக வீடமைத்து வாழ்வதைக் காணலாம்.

அகதிகளாக விரட்சி அடிக்கப்பட்டடு எந்தவித சொத்துக்களையா செல்வங்களையோ கொண்டிராத நிலையில் ஆரம்பத்திலிருந்து தமது ஒவ்வொரு நிலைகளையும் புத்தள மண்ணில் கட்டியெழுப்பிய பெரியமடு மக்கள் அவற்றை துறந்து விட்டு மீண்டும் பெரியமடு சென்று வாழ்வதைப்பற்றி சிந்திக்கின்றார்கள். அதே நேரம் தமது பூர்வீக மண்ணையும் விட்டுத்தர தயங்குகின்றார்கள். இதனால் இருதலை கொல்லி எறுப்புகளாகää இரண்டு ஓடங்களில் கால் வைத்த நிலையில் புத்தளத்திலும்
மன்னாரிலும் தமது வாழ்நாள்களை கழிக்கின்றார்கள். இது பெரியமடுவின் புதியதொரு அவதாரமாகவம் அமையலாம்

இன்று சுமார் மீண்டும் மீள்குடியேற்றம் எனும் பெயரில் அஹதிகளாக்கப்பட்டு 04 வருடங்கள் ஆகியும் சரியான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாத நிலையில் பெரும் துயரத்தில் வாழ்கின்றோம் என பெரியமடு வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எம். ஹனிபா ஹஸின்
முகாமைத்துவ பீடம் (இறுதி வருடம்)
இலங்கை தென்கிழக்கு பல்கழைக்கழகம் 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :