ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் கீழுள்ள பிரதேச சபைகளில் அட்டாளைச்சேனையும் ஒன்று அச்சபையின் உறுப்பினர்களாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 07 உறுப்பினர்களும், ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக -02 உறுப்பினர்களும் உள்ளனர்.
பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஏ.எல்.எம்.நஸீர் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து உதவித் தவிசாளராக இருந்த எம்.ஏ.அன்சில் தவிசாளராகவும் அடுத்த நிலையில் இருந்த ஏ.எஸ்.எம்.உவைஸ் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டனர். மீண்டும் ஒரு உறுப்பினர் ஒலுவிலைச்சேர்ந்த ஏ.எல்.சுபைதீன் இன்று இராஜினா கடிதத்தினை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சித்தீகிடம் கையளித்துள்ளார். அவருக்குப்பதிலாக இருப்பவர் ஐ.எல்.நஸீர் உறுப்பினராக வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment