அமைச்சர் அதாவுல்லாவின் பிரத்தியேகச் செயலாளர் சமட் காலமானர்

எம்.எம்.ஏ.ஸமட்,பழுலுல்லாஹ் பர்ஹான்--

ள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின்  பிரத்தியேகச் செயலாளரும் தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளருமான  ஆங்கில ஆசான் எம்.எச்.ஏ.சமட் தனது 51வது வயதில் இன்று(10.10.2014)  அதிகாலை இறையடியெய்தினார்.

 இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன் 1987ஆம் ஆண்டு முதல் மரணிக்கும் வரை மக்கள் பிரதிநிதிகளின் பிரத்தியேகச்  செயலாளராகக் அன்னார் கடமையாற்றி வந்தார்

1987ஆம் ஆண்டு வட கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக இருந்த  முன்னால் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் பிரத்தியேகச் செயலாளராகவும். 

பின்னர் தற்போதை பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின்  பிரத்தியேகச் செயலாளராகவும் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போதைய  உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் பிரத்தியேகச்  செயலாளராகவும் தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளராகவும் பணியாற்றி  வந்த அகில இலங்கை சமாதான நீதிவானும் மும்மொழிப் புலமைமிக்கவருமான மர்ஹும்  எம்.எச்.ஏ. சமட் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் காலமானார் அன்னாரின்; ஜனாஸா நல்லடக்கம் இன்று (10.10.2014) அஸர் தொழுகையின்  அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது.

யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து நற்கருமங்களை ஏற்று மறு உலக  வாழ்வை சுபிட்சமிக்கதாக, ஈடேற்றமுள்ளதாக ஆக்குவாயாக ஆமீன்!

இவர் முன்னால் பொருளாதார அபிவிருத்தி  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முன்னாள் பிரத்தியேக செயலாளருக கடையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :