அமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டுமாயின் அதற்கு இடமளிக்குமாறு களனி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களனி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
தம்மிடம் அறிவிக்காமல் களனி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் களனி தொகுதி அமைப்பாளரான தமக்கு அறிவிக்காது, இவ்வாறான செயற்பாடுகள் முன் எடுக்கப்பட்டுள்ளமை காரணமாக, தாம் அரசாங்கத்தில் இருந்து விலக தயார் என குறிப்பிட்டிருந்தார்.
.jpg)
0 comments :
Post a Comment