2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடாது -சரத் என்.சில்வா

ற்போதைய ஜனதிபதி, மஹிந்த ராஜபகஷவின் பதிவிக்காலம் 2016ஆம் ஆண்டே நிறைவடைகின்றது. 

அவ்வராறன நிலையில் அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை நடத்தப்படாது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் அச்செயற்பாடனது சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடுவதாக அமையும் என எச்சரித்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் இலக்குக் கொண்ட அனைத்துச் சக்திகளுடனும் ஒன்றுபட்டு செயற்படத்தயார் எனவும் அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்து இரண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக வௌியான தகவல்கள், ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிடுதல், நிறைவேற்று அதிகார ஒழிப்பு மற்றும் அவருடைய சமகாலச் செயற்பாடுகள் தொடர்பாக கேசரிக்கு கருத்து வௌியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் நீதிமன்றத்தை நாடமுடியாது

நாட்டின் ஜனாதிபதியொருவர் பொது நலன் கருதியே சட்ட சிக்கல்களுக்கு உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்க முடியும் அதைவிடுத்து தான் மூன்றாவது முறை போட்டியிடுவது சம்பந்தமான ஒரு தனிப்பட்ட நபரின் அபிலாசைகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் விளக்கமோ கேட்கும் உரிமை கிடையாது. ஜனாதிபதியினால் பொதுமக்களின் நன்மை கருதி அல்லது அரசியல் அமைப்பின் தௌிவுக்குறித்து உயர்நீதிமன்றத்தை நாடலாம். தற்போதுள்ளது ஜனாதிபதியின் தனிப்பட்ட பிரச்சினையாகும். நாட்டின் தனிப்பட்ட நபரின் விருப்பு வெருப்புகளுக்கு உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது.

3ஆவது முறைக்கு சட்டத்தில் இடமில்லை

ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலை நடாத்த எந்த சந்தர்ப்பத்திலும் நான்கு வருட முடிவில் தீர்மானிக்கலாம் என்பதை அரசியல் அமைப்பு பிரிவு 31(3யு) மிக தௌிவாக குறிப்பிடுகின்றது. ஆனால் 31(3யு)(னு) பிரிவானது சத்திய பிரமாணம் செய்த நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்த பதவியின் காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 18ஆவது திருத்த சாசனத்தின் 31 (2) பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது முறை போட்டியிட தகுதியற்றவர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2010ஆண்டு இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிடும் போது மனுவொன்றையும் நீதிமன்றுக்கு மனுவொன்றைச் சமர்பித்தே 19.11.2010ஆம் திகதி பதவியேற்றிருந்தார். ஆகவே குறித்த திகதியிலிருந்து ஆறு வருடங்கள் அதாவது 19-11-2016 ஆம் ஆண்டுவரை அவர் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதற்கு முன்னதாக அதாவது பதவிநிறைவுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் முடியாது மூன்றாவது முறை முறை போட்டியிடவும் முடியாது.

பாராளுமன்ற தேர்தலே முதலில் நடத்தவேண்டும்

தற்போது எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன நிறவேற்று அதிகாரமுறைமையை நீக்க வேண்டும் எனக் கோரிவருகின்றன. இவ்வாறான நிலையில் முதலில் பாராளுமன்ற தேர்தலையே நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்திற்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறில்லாது 2016 நவம்பருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதானது சர்வாதிகார ஆட்சிக்கே வித்திடும்.

காரணம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமாயின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் தமக்கு விரும்பியதொரு பாராளுமன்றமே உருவாக்கப்படும். அப்பாராளுமன்றத்தின் மூலம் ஜனநாயக் ஆட்சி மேற்கொள்ளப்படும் என்பது சந்தேகம். மேலும் நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி எதேச்சதிகார செயற்பாட்டிற்கு தற்போது கூட உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டாவது ஆட்சி ஆரம்பமாகி நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் கூட பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றார். இச் செயற்பாடானது ஏதெவொரு பின்னணியைக் கொண்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான பல நிலைமைகள் மாற்றப்பட வேண்டுமாயின் முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதே பொருத்தமானது.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ முதற் தடவையாக தேர்தலில் போட்டியிடும் போது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் -1 ஐ வௌிட்டார் இதில் அதிகாரங்கள் பகிரப்படுவதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும் உறுதியளித்திருந்தார். ஆதேபோன்று இரண்டாவது தடவையாக 2010இல் போட்டியிடும் போதும் மஹிந்தசிந்தனை வேலைத்திட்டம் 11 இலும் அவ்வாறான வாக்குறதிகளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது வரை வாக்குறதிகள் நிறைவேற்றப்படாது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான நிலைமையே ஏற்பட்டுள்ளது.

பொதுவேட்பாளருக்கு அவசரமில்லை

தற்போது பொதுவேட்பாளர் யார்? தனித்துப் போட்டியிடுவதா தனித்தனி வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றார்கள். அதுகுறித்து தற்போது அவசரப்படவேண்டியதில்லை. காரணம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக மக்களுக்கு தௌிவுபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் அவ்விடயம் தொடர்பிலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான தௌிவுபடுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஒரே இலக்கை உடைய சக்திகளுடன் இணையத் தயார்

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பாகவும், மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாதென்பது தொடர்பிலும் மக்கள் விடுதலை முன்னணியானது மக்கள் தௌிவுபடுத்தல்களை மேற்கொண்டுவருகின்றது. இதற்காக எனக்கு அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதுடன் இவ்வாறான இலக்குகளை முன்வைத்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக முன்வரும் அனைத்து சக்திகளுடனும் நான் இணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றேன். மாறாக ஒருபோதும் அக்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதால் அக்கட்களின் பிரசார நபராக இருக்கப்போவதில்லை என்பது உறுதி என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :