யு.எம்.இஸ்ஹாக்,எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் கரையோர மாவட்ட செயற் குழு ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச மக்களின் எதிர் கால அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் மீட்டெடுக்கும் ஆட்சி மாற்றத்துக்கான அரை கூவல் கூட்டம் புதன் கிழமை (22)பொதுவில்,நிந்தவூர்,சாய்ந்தமருது,மருதமுனை ,நற்பிட்டிமுனை பிரதேசங்களில் நடை பெற்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.ஏ. நபார் தலைமையில் நட்பிட்டிமுனையில் நடை பெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசிம், கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே ,மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான, எம்.எஸ்.மரைக்கார், கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில் , மத்திய மாகான சபை உறுப்பினர் பைறூஸ் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு கட்சி கிளையின் தலைமை காரியாலயயத்தை திறந்து வைத்தனர்
0 comments :
Post a Comment