சலீம் றமீஸ்-
இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 11வது செயலமர்வு ஒக்டோபர் மாதம் 10ஆந் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை இரு தினங்களுக்கு மஹரகம சிறிலங்கா யூத் நிலைய வளாகத்தில் இடம் பெறவுள்ளதாக இலங்கை இளைஞர் பாராளுமன்;ற உறுப்பினரும், சபை முதல்வருமான யு.எல்.முகம்மட் சபீர் தெரிவித்தார்.
இம் முறை அமர்வில் பெண் குழந்தை சர்வதேச தினத்திற்காக 'பெண் பிள்ளையின் தனித்துவம் மற்றும் அவரது சவால்' தலைப்புடனான விவாதத்தின் அடிப்படையில், இதன் அடித்தளமகா 'பெண் பொருளாதாரம், சமூகம் மற்றும் சட்ட ரீதியான ஒதுக்குகள் போதுமானது என்ற தலைப்பில் ஆளுங்கட்சியும், ஒதுக்குகள் போதுமானதல்ல என்ற தலைப்பில் எதிர்க்கட்சியும்' விவாதிக்க உள்ளது.
இந்த நிகழ்வில் விஷேட விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் துணைவியாரும், முதல் பெண்மணியுமான திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் , இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அளக பெரும, சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகாரம் தொடர்பான அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்(தவிசாளர்) சட்டத்தரணி லலித் பியும் பெரேரா உட்பட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உயரதிகாரிகள், முக்கியஸ்தர்களும் கலந்து
சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment